சந்தோஷமாய் வாழ்ந்தோம்-நாம்
சங்கடங்கள் சந்தித்ததில்லை-வரினும்
சகோதரங்களும் சினேகிதங்களும்
சமாளித்து வைப்பார்கள்
திங்கள் தோறும் நமக்கொரு
திதி இருக்கும்-பயப்பிடாதீங்கோ
திருவிழாவத்தான் நான் சொன்னன்
திருவிழா எண்டால் அது தெருவிழாத்தானே
தை பிறந்தா வழி பிறக்குமெண்டு
தைரியமாய் நம்மவர் வாழ
தையத்தக்கா போட்டபடி கொண்டாட ஒரு
தைப்பொங்கல் திருநாள் அது ஒரு பெருநாள்
பொங்கலென்றால் சொல்லவும் வேணுமே
பொறுமையா பொங்கின அப்பா-கடைசியில
பொடியன தேவாரம் பாட வைக்கிறதில
பொறுமைய இழந்து வீரபத்திரர் ஆயிடுவார்
மாசி பிறக்குதெண்டாலே காணும்
மார்தட்டிக்கொண்டு வெளிக்கிடுவினம்
மாட்டின சரக்குகள் கூட்டிக்கொண்டு-பாவம்
மாறி மாறி போறதுக்கு இடம்தான் இல்லை
காதலர் தினம் எண்டாலே ஒரு களைதான்
காஞ்சமாடு கம்பில விழுந்தமாரி நாலு சோடிகள்
காதலிக்கு ஸ்Mஸ் அனுப்பி காணாதெண்டு
காதல் வரிகளை சாலையிலும் எழுதுவார்கள்
பங்குனி மாசமெண்டா காணும்- நம்மூரில
பள்ளிக்கூடமெங்கும் விளையாட்டுப்போட்டி
பள்ளிப் பெடியளுக்கு வேறென்ன வேலை
பறந்து பறந்து பெண்கள் பள்ளி கிறவுண்ட சுத்திறது தானே
எங்கட பள்ளியில விளையாட்டுப் போட்டியெண்டா
எங்களுக்கு அரை நேரப் பள்ளி தானே
எப்பிடியாவது அண்ணைமார சுத்திப்போடுவம்
எங்கட பள்ளில எப்பவுமே march past கேவலம்தான்
சித்திரை எண்டால் பேந்தென்ன-நாடு பூராவுமே
சிங்கள தமிழ் புத்தாண்டு தானே-வெடிக்கோலம்தான்
சின்னப் பெடியளுக்குத்தான் மவுசு-ஏனெண்டா
சீனவெடிக்கு தடை-வால்ரியூப் விளையாட்டுத்தான்
காரணம் தெரியாமலே மருத்து நீர் வக்கிறது தான் வழமை
காத்துக்கிடந்து ஐயரிட்ட வேண்டினாத்தான் விசேசம்
காலம எழும்பி குளிக்கேக்க தான் திருவிழா கெலிவிழாவாகிறது
கரியம் முடிஞ்சதும் ஊர் சுத்திறது தானே நம்மவர் தொழில்
வைகாசி என்றாலே பேந்தென்ன வெய்யில் தானே
வையம் வாழ வியர்வை சிந்தும் உழைப்பாளிகள் காலம்
வைக்கோல் மண்வெட்டி எண்று வாழ்பவர்களை
வையகமே நினைவுகூறும் அற்புத நாள் அது
எரிக்கும் வெயிலென்றாலும் எம்மவர்க்கு
எதிரி விளையாட்டைக்குழப்பும் மழைதான்
எட்டுத்திக்கிலும் ரியூசன் இருக்கும்-கூடவே
எமக்கு கிறவுண்டும்-வியாபார உத்திதானே
ஆனி மாசம் எண்டா பிறகென்னா-வீரளி
ஆண்டாள் விழாக்கோலம் கொண்டிடுவா
ஆட்டம் பாட்டம் இல்லாமல் அமைதியாய்
ஆட்கொள்ளும் அந்த அம்பாள் தனி ரகம்
கோயிலுக்கு போய் ஆண்டவனை பாத்தமோ இல்லையோ
கோடியில் நிற்கும் அடியாரை விடுவதில்லை
கோபுரத்தின் உயரம் தெரியவிட்டாலும்
கோயிலிலுக்கு வந்த கோதைகளை விடமாட்டோம்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே-இதை
ஆறுவயசுக் குழந்தையும் பாடும்-தடவை
ஆயிரம் குடிச்சாலும் கூழின் சுவை தனிச்சுவை
இந்தக் காலத்து பொம்பிளயள் கூழ்காச்ச
இனியொரு பாரதி பிறந்து தான் பாட்டெழுதணும்
இயன்றளவு tryபண்ணி கடைசியில கிடக்கிறது
இனிப்புப் போட்ட உப்புத்தண்ணிதான்
ஆவணி எண்டதுமே ஆர்ப்பாட்டம் தான்
ஆடுறதுக்கு மேடை கிடச்சது போல-நமக்கு
ஆண்டிக்கோல நல்லூரான் அழகுக்கோலம் பூண்டிடுவான்
ஆகமமில்லையாம் ஆனால் ஆண்டவன் இருக்கிறான்
ஆடம்பரக்கந்தன் எண்டு சொன்னால் அது நல்லூரான் தான்
ஆலயம் சுற்றியும் பல தெருவிழாக்கள் மேடையேறும்
ஆயிரம் கண் கொண்டு பார்த்தாலும்-காத்திருந்து
ஆண்டொரு முறை பார்ப்பது இன்பம் தானே
புரட்டாசியிலும் நால்லூர் களை குறையாது
புரட்சிகரமான அனுபவம் தான் அது
புதுசு புதுசா சோடி சேருறதுக்கும் அந்த
புதுமைக்கந்தன் வரம் கொடுப்பாராம்...
பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகளில்
பக்கத்து வீட்டு பாமினியை தேடுவதுதான் climax
பத்துப்பேர் ஒருத்திய பாக்கிறதும்-பேந்து
பரதேசி மாரி கோஷடி மோதுவதும் வழமைதான்
ஐப்பசி எண்டால் தீபாவளி தானே-வியாபாரம்
ஐந்து கிளமைக்கு புடவைக்கடக்காரருக்கு தான்
ஐந்து பிள்ளைக்காரற்ற பாடுதான் கஷ்டம்-புது தம்பதிகள்
ஐஸ்கிறீமில தொடங்குவினம் தங்கட தல தீபாவளியை
எப்பிடி எண்டாலும் ஒரு படமாச்சு ரிலீசாகும்
எங்கட பெடியள் தளபதி பக்கம் கொஞ்சம்
எதிர்த்து நிக்க தலையின்ர பக்கம் கொஞ்சம்
எல்லாரும் சேந்து நிண்டா அது ஸ்ராருக்குத் தானே
கார்த்திகை எண்டாலே முருகனாரிட மாசமாம்
காஞ்சுபோன நிலத்துக்கு மழை ஒரு வரந்தானே
கார்த்திகை வி்ளக்கீட்டு-சொல்லத்தான் வேணுமோ
காவோலைச் சொக்கப்பானையை எப்பவுமே மறக்கேலாது
வீதியில சுட்டி வைக்குறது தான் முக்கிய வேலை
வீட்டுக்க வைச்சா முன்வீட்டுக்குத் தெரியாதே
வீம்புக்குத்தானே பிள்ளையள் படலைக்கு வாறது
விடுவாங்களா நம்மட பெடியள் குசும்பு பண்ணாம...?
மார்கழி எண்டா மழைதான் பெரும்பாடு
மாடும் தோப்புக்குள்ள மனிசனும் வீட்டுக்குள்ள
மாற்று மதமெண்டாலும் கிறிஸ்மஸ் ஒரு பொது விழாத்தான்
மாசம் முடிஞ்சா தை பிறக்கும்.................

ஒவ்வொரு மாசத்தையும் வரிந்து கட்டிவிட்டீர்கள்)
ReplyDelete