தலையங்கம் நிச்சயமாக வில்லங்கமானது தான்.வில்லங்கங்களை பற்றி எழுதுவது எப்போதுமே சுவாரசியமானதும் கூட.
பதிவை எழுத ஆரம்பிக்க முன்னதாகவே எனது மனதில் ஒரு தெளிவும், ஒரு தெளிவின்மையும் ஊசலாடுகிறது.எனவே முதலில் அதை வாசகருக்கு ஒப்புவிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.
இண்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞர் யுவதியினரும் வாழ்க்கையில் பலவித தெரிவுகளை சுயமாக மேற்கொள்வதற்கு பக்குவப்பட்டதாகவே கருதிக்கொள்கின்றனர்..அவற்றில் உன்மை வீதம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் எனக்கு தெளிவு இல்லை.
அந்த வகையிலே வாழ்க்கையில் நான் அதிகம் எதிர்பார்த்த ஒரு விடயம், என்னைப்போல் பலர் அதை எதிர்பார்த்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், என்னால் முடிந்த சில விபரங்களை பகிர,பதிய நினைக்கிறேன்..
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.அதை குறிப்பிடாத பட்சத்தில் கஷ்டப்பட்டு எழுதும் இந்த பதிவு முழுமை அடையாது என்பது எனது தெளிவான நம்பிக்கை.
நான் எடுத்துக்கொண்ட பதிவுத்தலைப்பிலே வெட்டிப்பேச்சு பேசுவதற்கு கூட எனக்கு அருகதை இருக்குமோ தெரியவில்லை.ஆனாலும் ஏதோ ஒரு துறையிலே அடிபட்டவன்(கவனிக்கவும் துறை தேர்ந்தவன் இல்லை) என்ற வகையிலே இதை ஒரு அனுபவ பகிரலாக பதியலாம் என நினைக்கிறேன்.
பாடசாலைக்கல்வி என்பது தரம் 1 இலிருந்து தரம் 10 வரைக்கும் தெரிவு சுதந்திரம் அற்ற ஒரு கல்வி செயற்பாடாகத்தன் இலங்கையில் நடைமுறை.இன்றையகாலகட்டத்தில் கல்விகற்கும் மொழி என்பது மட்டுமே குறித்த காலத்தில் தெரிவாக இருக்கிறது.அதற்கு பல காரணங்களும் கூறப்படுகிறது.அது நமக்கு இந்த இடத்தில் தேவையில்லை.
தர்ம் 10 இல் ஒரு சில பாடங்கள் பாடசாலையில் தெரிவிற்காக விடப்படுகின்றன.இருந்த போதும் பல பாடசாலைகளில் அரசாங்கத்தினால் விதந்துரைக்கப்பட்ட தெரிவுகளில் பலது நிராகரிக்கப்பட்டு சில பாடங்கலே தெரிவிற்காக அனுமதிக்கப்படுகிறது. இந்த தரம் 10 தெரிவுகளில் மாணவர்களின் விருப்பம் தெரிவில் முக்கிய பங்காக அமைகிற போதும் போட்டிப்பரீட்சையான உயர்தரத்தில் தெரியும் பாடத்திற்கான தெரிவு பெரும்பாலும் வெளிப்படையாக சுயமானதாக இருக்கின்ற போதும் மறைமுகமாக அது பல காரணிகளால் தூண்டப்பட்ட தெரிவாகவே அமைகிறது.
உதாரணமாக கணிதம், மருத்துவம், கலை, வர்த்தகம் என நான்கு முக்கிய பிரிவுகள் இருக்கின்ற போதும்,இவற்றுள் உயர்வானது எனவும் உயர்வற்றது எனவும் தெரிவுகளிடையே தரப்படுத்தல்களை உருவாக்கி விடுகிறது சமுகம். இந்த உயர்தர பாடாங்களில் உயர்வற்ற தெரிவுப்பாடம் என்பது பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபட்டே இருக்கிறது.எது எவ்வறிருப்பினும் இந்த உயர்வு இழிவு என்பதை எந்த அடிப்படையில் சமூகம் வரையறை செய்கிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராகவே இருகிறது.
என்னைப்பொறுத்தவரை சகல துறைகளுமே சம தராதரத்தில் நேக்கப்படுவதே ஆரோக்கியமானதாக கருதப்படக்கூடியது.
ஆக தரம் 10 இல் கிடைக்கப்பெறும் தெரிவுப்பாடங்களில் மாணவர்கள் தெரிவுசெய்யும் துறைகளே பெரிதும் (புறக்காரணிகளால்)செல்வாக்கிற்கு உட்படுத்தப்படாத தெரிவுகளாக இருக்கும் என்பது எனது பொதுப்படையான ஒரு கருத்து பதிவு.
உயர்தரத்தில் நிச்சயமாக நான்கு துறைகளுமே சமனான வேலைப்பளுவைக்கொண்டது தான். எதிர்காலம் தொழில்வாய்ப்பு என்ற அடிப்படையில் சமூகம் வைத்திருக்கும் கருதுகோள்களே அவற்றினிடையே வேறுபாட்டை உருவாக்கிக்காட்டுகிறது..
இயல்பான அறிவு,இயல்பான இச்சை என ஒவ்வொரு தனிமனிதனிற்கும் சில இயல்பு நிலைகள் இருக்கும்.ஆனால் அவை சமூக அந்தஸ்துகளால் செல்வாக்கடைந்து விடுவது தான் பரிதாபகரமானது.
ஒரு உதாரனத்திற்கு சினிமாக்களிலே வருகிற நடிகைகளை பார்க்கும் போது ஒவ்வொருவரும் ஓரிரு நடிகைகளை ரசிக்கும் நிலையிலிருப்பார்கள்.அது ஆளுக்கு ஆள் மாறுபடும்.ஆனால் திரைப்படங்களில் ஹீரோயின்களை பார்க்கும் போது எல்லா ஹீரோயினும் அழகாகத்தான் இருப்பார்கள்.உதாரணத்துக்கு கிரன் மற்றும் நயந்தாராவை வைத்துக்கொள்ளுங்களேன்.(இதில யார் வடிவு எண்டு நான் சொல்லத்தேவையில்லை)இருவரையுமே திரைப்படங்களில் பார்க்கும் போது பவ்வியமாகத்தான் இருப்பார்கள்.ஏனெனில் ஒவ்வொரு நடிகையும் கதாநாயகியாக சித்தரிக்கப்படுகையில் மிகைப்படுத்தப்பட்டே காட்சிப்படுத்தப்படுவாள்.
இதே மாதிரி மிகைப்படுத்தப்பட்ட நிலையில் தான் உயர்தர பாடத்தெரிவும் பல மாணவ்ர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
மிகைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படுபவற்றுள் தெரிவுகள் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் தீமகளை பார்த்தோமேயானால், அதி திறமை வாய்ந்த மாணவர்கள் ஒரு துறைக்கு தள்ளப்படுவதும், குறித்த துறைக்கு பொருத்தமில்லாத மாணவர்கள் அந்த துறைக்குள் தள்ளப்படுவதும் மேடையேறுகிறது..
இதனால் போட்டிப்பரீட்சையில் திறைமையானவர்கள் எல்லோரும் குறித்த ஒரு துறையிலான மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக சீட்டுக்காக போட்டியிட்டு அதிதிறமை மடும் வெற்றி பெற சதா திறமை தோல்வியை ஏற்றுக்கொள்கிறது.
ஆக, பாடசாலை காலங்களில் துறை தெரிவு செய்யும் போது மிக நிதானமான சிந்தனை மாணவர்களின் மத்தியில் அவசியம்.
மாணவர்கள் என்கிற பொழுது மேலும் ஒரு விடயத்தை நிச்சயமாக கூறித்தான் ஆக வேண்டும். சமுதாயம் உங்களின் மீது என்ன பார்வை கொள்ளும் என்பதையோ, சக நண்பன் தெரிவுசெய்யும் பாடம் எது என்பதையோ கருத்தில் இருப்பதை முற்றாக தடை செய்யவேண்டும். நிச்சயமாக எனக்கு என்ன துறை பிடித்திருக்கிறது என்பதே மேலோங்கிய சிந்தனையாக இருக்க வேண்டும்.
அடுத்த விடயமாக கவனிக்க வேண்டியது நீங்கள் தெரிவுச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள தெரிவுகள் பற்றிய தெளிவான விளக்கம். இந்த விளக்கத்தை அந்தந்த துறை சார்ந்தவர்களிடமிருந்து மட்டுமே விசாரித்து அறிய வேண்டும்.சாதாரண தர அனுபவங்களையோ அல்லது சாதாரண தர பாட பெயர்களையோ வைத்து உயர்தர தெரிவு பாடங்களை அனுமானிப்பது முற்றிலும் தவறு.அதே போல ஒரு துறையில் இருப்பவனிடம் அத்துறையை பற்றி மாத்திரம் கேட்பதோடு நிறுத்தாது பிற துறைகளைப்பற்றிய அவர்களது கண்ணோடங்களையும் கேட்டறிந்த்து கொள்வது சாலப் பொருத்தமானதாகும். அதன் பின்னர் தனிமையில் சுய விருப்பத்தை தெரிவு செய்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும்..இந்த இடத்தில் நிச்சயமாக நாம் யாரை சந்திக்கிறோம் என்பது ஒரு சவாலாகவே அமையும்.
அடுத்த விடையம், எந்தத்துறை தொழில் ரீதியாக முக்கியமானது என்பதே.இலங்கையில் நடைமுறையிலிருக்கும் நான்கு துறைகளுமே தொழில் ரீதியாக வாய்ப்புக்கள் உள்ளவைதான்.சொல்லப்போனால் தொழில் வாய்ப்புக்கள் என்பது அனைத்து துறைகளுக்கும் சமமாகவே உள்ளது என்பது தான் எனது கருத்து.(இதற்கு எதிர்ப்புகள் பல இருந்தாலும் திறமை அடிப்படையில் தொழில்வாய்ப்புகள் தங்கியிருக்கிறதே தவிர துறை அடிப்படையில் இல்லை என்பது எனது வாதம்).
எது எவ்வாறிருப்பினும் உயர்தர பாட தெரிவின் போது தொழில்வாய்ப்புகளைப்பற்றிய சிந்தனை பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை.ஆனால் சிறுவயது கனவுகளிற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.
சிறுவயது கனவு என்பது ஓவ்வொருவருக்கும் இருக்கிற ஒன்றுதான்.ஆனால் அநத கனவு நனவாக வேண்டும் என்ற எண்ணத்தின் ஆழம் மிக அவசியமானது.அந்த ஆசையின் ஆழம் உயர்வாக இருக்கிட்ற பட்சத்தில் அந்த துறை மாத்திரமே பயனுள்ளதாக அமையும். எவ்வளவுதான் திறமை சாலியாக இருந்தாலும் வேறொரு துறையில் தான் எனது கனவு நனவாகும் என ஒரு நினைவு ஏற்படுமாக இருந்தால், தான் இருக்கும் துறையில் சாதிக்க தவறுவான் என்பது திண்ணம்..உதாரணமாக மாற்றான் பொண்டாட்டி மேல ஆசை வச்சால் தன் மனவி மீது இருக்கும் உறவு மற்றும் ஈடுபாடு தானாகாவே குறைந்து விடுவது போல்.
ஆக உயர்தர பாடத்தெரிவு செய்யும் போது அவ்வப்பாடப்பரப்புகள் பற்றிய தெளிவான அறிவு இருக்க வேண்டியது அவசியம்.சமூகம் அவ்வப்பாடங்களிடையே கொண்டிருக்கும் தர நிர்ணயங்கள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.சிறுவயது கனவுகள் ஆழமாக இருப்பின் அவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தொழில் ரீதியான எதிர்காலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை.
உயர்தரத்தின் பின்னர் பல தெரிவுகள் இளைஞர்களின் வாழ்வில் வந்து போகிறது. இதில் பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு பொதுவாக மூத்தவர்கள் வழிகாட்டுவார்கள்..வழிகாட்டுகிறார்கள்..ஆனால் பல்கலைக்கழகத்தை தவற விடுபவர்கள் நிச்சயமாக வழிகாட்டல் இல்லாமலேயே இயங்குகிறார்கள்.
மேற்படி சந்தர்ப்பத்தில் கவனிக்க வேண்டிய அல்லது அறிய வேண்டிய விடயங்கள் பல உள்ளது.
முதலில் பாடசாலைக்கல்விக்கு அடுத்த படியாக மேற்கொள்ளும் அனைத்து கல்வி செய்ற்பாடுகளுமே தொழிலை மையமாக கொண்டது தான்.எனவே பாடசாலைக்கல்விக்கு அடுத்த நிலைக்கல்வியானது நிச்சயமாக தொழில் ஒன்றை நோக்கியதாகவே அமைய வெண்டும்.தொழில் நோக்கமில்லாத மேற்படிப்பு திசைகாட்டி இல்லாத கப்பல் பயணம் போல தான் அமையும்.
தொழில் இலக்கு ஒன்றை நிர்ணயிப்பதற்க்குதேவையான அறிவு நிச்சயமாக பாடசாலையிலிருந்து வெளிவந்த மாணவர்களுக்கு இருக்கப்போவதில்லை.
எனவெ முதலில் பல்வேறுபட்ட தொழில்களில் இருப்பவர்களிடம் திழில் ரீதியான தகவல்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது. மேற்படி தகவல்களை திரட்டுகின்ற போது சாதாரணமாக அனைத்து தொழில்களுமே தனக்கு பொருத்தமானதாக இருப்பதாக ஒருவருக்கு தோன்றுவது வியப்பதற்கில்லை.அதை தவறானதொன்றாக கூறவும் முடியாது.ஆனாலும் அவ்வத்தொழில்களை அடைவதற்கு கடந்து செல்லவேண்டிய பாதைகள் மற்றும் கடவைகள் என்பவற்றையும் சேர்த்து பார்க்கிற பொழுது ஒரு சில வாய்ப்புக்கள் மாத்திரமே வசதியாக அமையும்.
மெற்படி தகவல் திடரட்டலால் அறிந்து கொண்ட தரவுகளை தெளிவாக அலசி ஆராய்கின்ற வேளைகளில் ஏற்கன்வே சிறிதளவு அறிவு இருக்கின்றது என்ற தோற்றப்பாடுகள் ஒருசில துறைகளில் ஏறடுவது வழமை.ஏலவெ தெரிந்தவற்றை விட்டுவிட்டு புதுமைகளை தேட நினைப்பதும் வழமை.ஆனால் புதுமைகளை பரீட்சித்து பார்ப்பதற்கான கால அவகாசத்தை இந்த நவீன உலகம் இளைஞர்களுக்கு இலகுவாக தந்துவிடாது.
தொழில் ரீதியான தேடல்களை மேற்கொள்ளுகிற போது ஏலவே உங்களிடம் உள்ள திறமைகளையும் உங்களது நிலையையும் ஓரளவுக்கு தீர்மானித்துக்கொள்ள முடியும். சுய மதிப்பீட்டு முறை மூலம் எது முன்னிலையில் நிற்கிறதோ அந்த துறையையே தெரிவு செய்ய வேண்டுமே தவிர உயர்தரத்தில் தெரிவு செவதற்கு கூறிய உத்தியை போல் விருப்பதிற்கு முதலிடம் கொடுப்பது 100% வெற்றியளிக்கும் என்பதற்கில்லை.
இந்தபடிப்புக்கு என்ன தொழில் என்று ஒரு போதும் பார்க்கக்கூடாது.இந்த தொழிலிற்கு என்ன படிப்பு அவசியம் என்று பார்க்க வேண்டும்.
உயர்தர பாடத்தெரிவில் கற்றல் துறையில் எது விருப்பம் என தேர்ந்தெடுக்க வேண்டும் மேற்படிப்பு துறை தெரிவில் தொழில் துறையில் எது பொருத்தம் என தெரிய வேண்டும்.
தொழில் துறயை தெரிவு செய்ததன் பின்னர் ஊகத்தின் அடிப்படையில் அல்லது குறுகிய அறிவுடன் கல்வியை தெரிவுசெய்வது மிகப்பெரியதவறு. குறித்த தொழில் துறையில் முன்னேற்ற பாதையில் உள்ள, தற்கால நடைமுறைகளில் பரிச்சயமானவர்களிடம் ஆலோசனை பெற்று எந்தவகையான மேற்படிப்பு அவசியம் என தெரிந்து,எது தரமான, உறுதியான பாதை என உறுதிப்படுத்தி அதன் பின்னர் அத்துறைசார் கல்வியை மேற்கொள்ள வேண்டும்.
எனவே மேற்படிப்பினை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு தெளிவான தொழில் சந்தை பற்றிய அறிவை பெறவேண்டும் என்பதே எனது இரண்டாவது கருத்து பதிவு.
மேற்படி எனது கருத்து பகிரலில் தவ்றுகள் இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டி இந்த பதிவின் அடிப்படை நோக்கத்தை அடைய வழி செய்யவும்..
It is so great to see your article, and I apprciate it. It has the long vision, the capacity, and it is so important now to the students who are next to decide the destiny of our country. It is so vital, and I congratulate you for accepting to write in this topic, where most of the writers would not write.
ReplyDeleteThe article is so hopeful, inspirational and enthuastic. I wish to read more in the future.
Well done
9ce & most wanted article for present generation. well done job machchan.
ReplyDeleteThanks Jana and so called Admin
ReplyDeleteஅமரேஷ், எக்காலத்திற்கும் பொருத்தமான பதிவு.
ReplyDelete