உத்தியோகபூர்வமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் நான், தகவல் தொழில் நுட்பத்துறையில் பட்டப்படிப்பினை நீண்டகாலமாக தொடர்ந்து வருவதாக என்னாலும் அறியப்படுகிறது.
தவிர, துடுப்பாட்டம், அரசியல், உளவியல், மனோதத்துவவியல்,சட்டம், இசை, நிகழ்வுகள், சமூக செய்ற்பாடுகள்,பெண்னியல் மற்றும் வாத விதண்ட வாதங்களில் ஆர்வமுள்ளவன்.
நான் எழுதுவது என்னை ஒரு எழுத்தாளனாக பரிணமித்துக் காட்டுவதற்காகவோ அல்லது என்னை ஒரு மேதாவியாக வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது எனக்கு பலதும் தெரிந்திருக்கிறது என்று பறை சாற்றுவதற்காவோ அல்ல என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட்டு கொள்கிறேன்.
மேலும், எனது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவும், அந்த கருத்து பகிர்வினால் ஆரோக்கியமான ஒரு சமுகம் உருவாகலாம் என்ற ஒரு பேராசையும், ஆரோக்கியமானா சில வாத பிரதி வாதங்கள் உருவாகும் என்பதாலும், அதனால் எனது அறிவை நான் மேலும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்காவுமே இந்த வலைப்பதிவை கையாண்டு வருகிறேன்.
இந்த வலைப்பதிவை வெகு விரைவில், எனது தனிப்பட்ட வலைத்தளமாக மாற்றியமைக்கவும் எண்ணியுள்ளேன்.
ஆரோக்கியமான கருத்துப்பகிர்வை ஆதரிப்பவர்கள், விரும்புபவர்கள் மற்றும் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வில் நம்ம்பிக்கையுடையவர்கள் மட்டும் எனது பதிவுகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மட்டும் போதுமானது...வாசகர் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதோ, ”பேமஸ்” ஆகவேண்டும் என்பதோ எனது இலக்கல்ல என்பதை இத்தால் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.