Friday, August 26, 2011

மண்வாசனை பகுதி 1.1

சிட்டுக் குருவிகளாய் சுத்த்த் திரிந்தோம்
சிறகுகளின்றி பறந்து திரிந்தோம்-நாம்
சிங்கங்கள் போல கர்ஜித்தும் இருந்தோம்
சிறுத்தைகள் போல சீறியும் பாய்ந்தோம்



தூக்கம் தொலைத்த இரவுகளறியோம்-நாம்
தூங்கினால் பருவத்தெண்றல் தாலாட்டு பாடும்-வீதித்
தூரம் அளப்பதெண்றால் எங்கள் வீட்டு
துவிச்சக்கர வண்டிகளை கேட்டுத்தான்

நான்கைந்து பேர் சேர்வதெல்லாம் “செட்”அல்ல
நாற்பது பேர்தான் நம்மூர் வழக்கம்
நாளுக்கொரு ஏரியாவை முற்றுகையிட்டு
நாலு பிகரை பார்க்காவிட்டால் இருளாது நமக்கு

காலை எழும்பினால் இங்கிலீசு கிளாசு
காலேஜ் போறதேதோ 9 மணிக்குத்தான்-மூண்று
கால் மணி நேரத்துக்கு மேல் கதிரையில் இருந்தறியோம்
காத்திருந்து தான் வாத்தியாரும் படிப்பிக்கணும்

பள்ளி விட்டதும் விளுங்கிவிட்டு ரியூசன் போகணும்
படிக்கிறதுக்கெண்டு இல்லாவிட்டாலும் பாக்கவாச்சு போகலாம்
பத்து வயசு பிள்ளை தொடக்கம்-நம்ம
பக்கத்து வீட்டு பிள்ளை வரை அங்கயே பாத்துக்கலாம்

இடையிடையே கிடைக்கும் லீவுகளுக்கெல்லாம்
இரண்டொரு சிக்ஸர் அடிக்காட்டா நமக்கு
இருப்புக்கொள்ளாது-விளையாடத

்தொடங்கினால்
இருண்டதும் தெரியாது விடிஞ்சதும் தெரியாது

மாலை நேரம் என்பது நமக்கு 7 மணிதான்
மாடுகள் வீடு போறமாதிரி நம்மூரில நாமதான்
மாஸ்ரர் என்ன படிப்பிச்சார் எண்டு அம்மா கேட்டா
மாத்தி மாத்தி மனுசன் படிப்பிச்சதில ஒண்டும் விளங்கேல்லையம்மா

வீட்டுக்கு வந்தா நம்ம அருமை சகோதரங்களோட
வீண் சண்டை பிடிக்காட்டா -அப்பர் நாம
வீட்டுக்கு வந்தத நம்பவே மாட்டார்-அப்பா
விளக்கம் கேட்டு 2 போட்டாத்தான் அடங்குவம்

அம்மா அருமையா சமைச்சுத்தர - களவா
அப்பருக்கு தெரியாம வேளைக்கே வெட்டீற்று
அப்பர் தின்னப்போகேக்கை களவா T V ல
அப்பாவுக்காக பாக்கிறதோட போச்சுது இரவு

சோம்பேறிகள் மாதிரி திரிஞ்சாலும்-ஏதோ
சோதினை எண்டா கொஞ்சம் படிப்பம்
சோகம் எண்டது நமக்கு தெரியாது
சொர்க்கம் எண்டா அது நம்ம ஊருதான்

No comments:

Post a Comment