Saturday, June 12, 2010

அணிலேறவிட்ட நாய் போல..!

எண்றோ பார்த்திருக்க வெண்டும்
ஆனால் அன்றுதான் பார்த்தேன்
உன்னை..

அந்த முதல் நாள்
நீமுதல் பார்வையை
தரவில்லை....

ஆனால் நான் தந்திருந்தேன்-என்
மொத்தப் பார்வையையும்-விடு விடு
அது சொல்லமறந்த கதை.

சூடு கண்ட பூனை எனக்கு
நம்பிக்கையில்லை அந்த
கண்டறாவியில்...

பின்புதான் தெரிந்தேன்
உனக்கும் துணிவில்லை-அந்த
சூட்டில் கை வைக்க என்று....

நெருங்கிப் பழகினேன்
நீ அரவணைத்தாய் எனை
அருகில் வந்து....

தூக்கம் மறந்து வாழ்ந்த
இதயமது கிடைக்கப் பெற்றது
பஞ்சு மெத்தையொன்று..

பகிர்ந்தோம் எம் பழைய
நினைவுகளை-அதில் பின் துறந்தோம்
துன்ப நிகழ்வுகளை....

சிரிப்பதுண்டு,சிரிக்க வைப்பதும் உண்டு
ஆனால் எம்மிடம் இல்லை
உன்மை சிரிப்பு....

மீட்டோம் இனிய நினைவுகளை
மட்டும் பேசினோம் எம்மனம்
சிரிக்கும் மட்டும்....

கடிவாளமின்றி வாழ்ந்த என்னை
கட்டிப்போட்டாய் சில சமயம்
அடங்க மறுத்தது என் ஆணவம்....

ரசித்தேன் உன் கோபங்களை
ருசித்தேன் உன் சுழிப்புகளை
அலசினேன் உன் அசைவுகளை....

கண்டேன் ஏதோ சோகம்
உன் அசைவுகளும் சிரிப்புகளும் பேசின
என்னுடன் உன்னைப்பற்றி....

உன் சோகம் என்னை வாட்டிய
போதுதான் தெரிந்தேன் நான்
வாழத்தகுதியற்றவன் என்று....

நீ சில சமயம்
துள்ளுவாய்-துள்ளியது -என்
இதயமும் தான்....

துள்ளித்துள்ளி தூரம் போய்விட்டாய்
நான் இங்கேயே நிற்கிறேன்
துள்ளியபடி.......

அணிலேறவிட்ட நாய் போல...........!

No comments:

Post a Comment