Thursday, June 3, 2010

மரணத்தைக்கண்டவர்கள்

அன்மையில் மரணத்தின் பின்னரான வாழ்க்கைTo read that என்ற தலைப்பில் நண்பர் ஒருவரின் பதிவினை படித்த போது எனது கருத்துகள் சிலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம் எண்று நினைத்து எழுதுகிறேன்..

மனிதர் அனைவரும் அதிகம் பயப்படுவது மரணத்திற்குத்தான். காரணம் மரணம் என்றால் என்ன என்று யாருக்குமே தெரியாது. மரணம் என்பதை இதுவரை விஞ்ஞானமும் வரையறுக்கவில்லை என்பதே உன்மை.

இந்த நிலையில் மரணத்தை கண்டுவந்ததாக சிலர் கூறுவது என்பது எந்தவகையில் உன்மை என்பது தான் கேள்வி.

மரணத்தை நெருங்கியவர்கள் (அதாவது இறுதியில் மரணித்தவர்கள்) நடந்துகொண்ட விதங்களையும் அவர்கள் மரணித்ததன் பின்னர் அவர்களது மூளையையும் வைத்து விஞ்ஞானம் நடாத்திய ஆய்வுகளிலிருந்து சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதாவது மரணிக்கும் வேளைகளில் ”மாறாட்டம்” என்ற நிலைமையை அடைவார்கள். இந்த “மாறாட்டம்” என்பதை உற்று நோக்கினால் பழைய விடயங்களை அவர்கள் மீட்டுக்கொண்டிருப்பார்கள். உதாரணமாக “என்னை அம்மா கூப்பிடுறா”.
“அப்பா கதைக்கிரார்”.
எண்றவாறு கதைப்பார்கள். (மரணத்தை அண்மித்த மாறாட்டத்தில் இருப்பவர்கள்)
மேற்படி செயற்பாடுகளுக்கு சதாரணமாக நாம் கொடுக்கும் விளக்கம் என்னவெண்றால் மரணத்தை அண்மித்த நிலையில் அவர்கள் மரணத்தின் பின்னர் வாழப்போகும் உலகில் மரணத்தின் பின்னர் வாழ்வோரை உணர்கிறார்கள் அல்லது அவர்களோடு பேசுகிறார்கள் என்பதே.

இதற்கு விஞ்ஞானம் கொடுக்கும் விளக்கம் வேறு. அதை பற்றி பார்க்கும் முன் மனித மூளை நினைவுகளை பதிந்து கொள்ளும் முறை பற்றி கூறவேண்டியது அவசியம்.

நினைவுகள் ஒவ்வொன்றும் மனித மூளையில் கோடுகளாக கீறப்படுகின்றன. திரும்ப திரும்ப ஒரு நினைவு ஏற்படுமாயின் அந்த நினைவு  மூளையில் மிக ஆழமாக கீறப்பட்டு விடும். இதைத்தான் ஆழமாக பதிதல் எண்று சொல்லுவார்கள். இதே போலவே அதிக கீறுகள் விழாத பருவத்தில் ஏற்படுகின்ற கீறல்கள் ஆழமானதாகவும், காலம் செல்ல செல்ல கீறல்களின் ஆழம்/வலிமை குறைந்து செல்வதும் உண்டு.

இதன்படி மரணத்தை அண்மிப்பவர்களால் தமது மூளையில் உள்ள ஆழமற்ற கீறல்களை உணர முடியாத நிலை ஏற்பட்டு விடும். இன்னொரு விதத்தில் சொன்னால் மரணம் வரும் போது மூளையின் கீறல்கள் அழியத்தொடங்கிவிடும். மிகவும் ஆழமாக பதிந்த கீறல்களே அங்கே மீதமிருக்கும். இந்த நிலையில் ஆரம்ப கால நினைவுகளையே அவர்களால் மீட்க முடியும்.
இறுதியில் மரணத்தின் போது மூளையிலிருந்து அவர்களது நினவுகள் அனைத்தும் முழுமையாக அழிந்துவிடும்.

இது இவ்வாறிருக்க சிலர் தாங்கள் மரனத்தை கண்டு வந்ததாகவும், மரணத்தை நெருங்கி வந்ததாகவும் சொல்கிறார்கள்.
மரணத்தை அண்மிக்கும் நிலையில் நடக்ககூடிய விடயங்களைத் தான் இதுவரையும் விஞ்ஞானம் வரையறுத்திருக்கிறது.

மரனத்தை கண்டவர்கள் தாங்கள் இறப்பை உணர்வதாகவும், பதற்றமற்ற நிலையில் இருப்பதாகவும் சொல்வது அவர்கள் மரனத்தின் மீது அதீத பயம் வைத்திருப்பதாலும் மரணத்தை அடையப்போவதாக நம்பியதாலும் அவர்களின் மனதில் தோன்றிய உணர்வுகளே.
இறைவனை காண்பது ஒளியை காண்பது என்பது காலம் காலமாக அவர்கள் தமது மனதில் ஏற்றிவைத்த கருத்துகளின் மீட்டல்களே.

மரணத்தின் பின் உயிர் உடலை விட்டு பிரிந்து செல்லும் என்பதும், அது சொர்க்கம் நரகம் என்ற இடங்களில் ஒன்றை செண்றடையும் என்பதும், பூவுலகை விட்டு விண்ணுலகுக்கு செல்லும் என்பதும் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளே.
இவ்வாறான கதைகளின் பிரதிபலிப்பையே இந்த மரணத்தை சந்தித்து வந்ததாக கூறிக்கொள்பவர்கள் சொல்லிக்கொள்வது.
உன்மையில் ஏதோ ஒருகட்டத்தில் பழைய நினைவுகளின் அடிப்படையில் அவர்கள் தாங்கள் மரணித்துவிட்டதாக நம்புகிறார்கல்.அப்படி நம்பிய நிலையில் அவர்கள் மனதில் ஓடுகிற எண்ணங்களையே பின்னர் மீட்டு சொல்லுகிறார்கள்.

உன்மையில் மரணம் என்கிற நிகழ்வு நடக்கையில் மனித மூளையில் இருந்து நினைவுப் பதிவுகள் அழிந்து செல்கின்றன என்ற இந்த விஞ்ஞான கருத்துடன் பார்க்கையில் மரணத்தைக்கண்டு வந்தவர்கள் நினைவுகளை மீட்டகக் கூடியதாக சொல்வது ஆச்சரியப்பட வேண்டியதொன்றே...

1 comment: