Wednesday, November 23, 2011

களவும் கண்ணியமும்-பாகம்-3

இரண்டு பதிவுகள் களவும் கண்ணியமும் தலைப்பில் எழுதியாச்சு. கொஞ்சம் விவகாரமான தலைப்புத்தான் என்பது எழுத ஆரம்பித்ததன் பின்னரே என்னால் உணரக்கூடியதாய் இருந்தது. லேசாக மேடையில் சுவாரஸ்யமாக பேசிவிடலாம், ஆனால் அதை சரிபட எழுத்துமூலம் எடுத்துரைப்பது என்பது கொஞ்சம் சவாலான வேலைதான். ஏதோ என்னால் முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன். எனது எழுத்துக்களில் குறைந்தபட்ச சமுக இழையோட்டம் இருக்கவேணும் என்பது எனது ஆவல். அந்த வகையில் இந்த பதிவு நிறையவே சமுக பிரச்சனை ஒன்றை ஆராய்ந்திருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த தொடரிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன்…

ஏலவே பாகம் ஒன்றில்: உறவு உருவாஅகும் விதம் மற்றும் அவற்றிற்கான பெயரிடல் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
பாகம் இரண்டில்: பெயரிடப்பட்ட உறவினுடைய வளர்ச்சிப்படிகளை குறிப்பிட்டேன்..
இனி…..
(இது ஏதோ சண் டீவீ மெகா சீரியல் ரேஞ்சில போற மாதிரி எனக்கே ஒரு பீலிங்கு….)
எதிர்ப்பால் உறவு/ நட்பு என்பது தவறானதா சரியானதா என்ற கேள்வி இதுவரையும் பூரணமான விடையளிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. விடையளிக்கப்படாமைக்கான காரணமும் இருக்கிறது என நான் நம்புகிறேன். ஏனெனில் எதிர்ப்பால் உறவொன்றில் பாலியல் ரசம் இழையோடுவதை யாரும் இலகுவில் தடுத்துவிட முடியாது. ஆனால் அந்த பாலியல் ரசத்தை தவறென்று சொல்லிவிடவும் முடியாது. உன்மையை சொல்லப்போனால் அவற்றை தவறு என்பது மனிதத்திற்கு ஒவ்வாத ஒன்று.
பாலியல் உண்ர்வு தேடல் என்பது மனிதனது சதாரணமான தேவைகளில் ஒன்று. பசி தாகம் கோபம் போன்றவை போல ஒரு உணர்வு தான் பாலியலும். ஆனால் பொதுவாகவே பாலியல் என்பது தவறானது, தவிர்க்கப்பட வேண்டியது என ஒரு சமுக கட்டுப்பாடு கட்டவுழ்த்து விடப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த சமுக கட்டுப்பாட்டில் என்ன சமுக அக்கறை இருக்கிறது என்பதைஇயும் இங்கே நாம் ஆரய்ந்து தான் ஆகவேண்டும்.
ஆக எதிர்ப்பால் இருவர் பழகும் போது அவர்களை அறியாமலே ஒரு சுகம், அமைதி, இன்பம் இவையனைத்தையும் தாண்டி ஈப்பு ஒன்றும் இருக்கத்தான் செய்யும். அதுதான் எதிர்ப்பால் உறவின் தனித்துவமுமே. இதனால் தான் ஓரின நண்பர்களிடையே ( ஓரின பாலியல் உண்ர்வுகொண்ட நண்பர்களல்ல) இருக்ககூடிய அன்னியோன்னியம் எப்போதுமே எதிர்ப்பால் நட்பின் அன்னியோனியத்திலும் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
இந்த அதிகரித்த அன்னியோன்னியத்திற்கு நம்மாளுகள் கொடுக்கிற விளக்கம் தான் ரொம்ப வினோதமானது.
·         அவளோட கதைச்சா ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்.
·         அவள் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாள்.
·         அவள் மனசுக்கு ஆறுதலா இருப்பாள்.
·         ஏதோ தெரீல அவள் சொன்னா கேப்பன்.
·         நல்ல மென்மையா கதைப்பாள்.
·         ஜாலியா இருக்கும்..
இப்பிடி ஏராளம்.
இது எந்தா பெண்ணோட கதைச்சாலும் ஆணுக்கு இருக்கும் உணர்வு தான். ஆனால் அதை சமுகம் ஒருத்தியுடன் (அல்லது மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன்) மட்டுமே அனுபவிப்பதற்கான கட்டமைப்பை அமைத்துவிட்டது. இந்த (கலாசாரம் எனப்படும்) கட்டமைப்பு கொஞ்சம் விவகாரமான விளைவை தான் கொடுத்திருக்கிறது..
எப்போதுமே தவைக்கேற்ற அளவு பொருள் இருந்தால் அந்த பொருளின் சந்தை விலை குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கலாசாரம் தேவையை குறைக்கவில்லை ஆனால் பண்டத்தின் அளவை குறைவாக காட்டி சந்தை விலையை கூட்டி வைத்திருக்கிறது.
இதன்  விளைவு ஒவ்வொரு இளைஞனும் தமது எதிர்ப்பாலுறவை புனிதமானதாக, முக்கியமானதாக எண்ணுகிறார்கள். அதை ஏதோ கோட்டையை கட்டி பாதுகாப்பது போல் காக்க முயல்கிறார்கள். இந்த கோட்டை கட்டும் நேரத்தில் ஆண்கள் சாகசமாக ஆட்டையை போட்டுவிடுகிறார்கள்.

இதில மேலும் என்ன காமெடி என்றால் நட்பிற்கு எல்லை வேற இல்லையாம். ஒருத்தருக்கு ஒருத்தர் துணை..உண்ர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற கருத்துக்களின் அடிப்படையில தான் எல்லா அசம்பாவிதங்களும் நடந்தேறுது.
காதலின் உச்சக்கட்டம் திருமணம் என்ற நிலை மாதிரி எதிர்ப்பால் நட்பின் உச்சக்கட்டம் உடலுறவு/அங்கசேஷ்டை என்ற நிலை இன்றிருக்கிறது.
இதை முற்றாக தவறு என்று சொல்லு முழுப்பிழையையும் எமது இளம் சமுதாயத்தில் போட்டுவிடவும் முடியாது.
பதின் வயதில் சுரக்கும் ஓமேன்களுக்கு கிட்டத்தட்ட 17 (ஆண்களுக்கு) 10 (பெண்களுக்கு) ஆண்டுகளுக்கு பின்னர் தான் நமது சமுதாயம் தீர்வு கொடுக்கிறது. அதுவரையும் ஒரு இளம் வயது இளைஞன் அல்லது யுவதியின் பால் ரீதியான உண்ர்விற்கு இந்த சமுதாயம் எந்த பதிலையும் இதுவரை சொல்லவில்லை.
இயல்பாக நடக்கும் பாலியலை சில சமுக காரணங்களை காட்டி தவறென்று சொன்னதே தவிர அதற்கு எந்த பரிகாரத்தையும் எமது சமுகம் கொடுக்கவில்லை.
சரி அப்படி பாலியலை தவறென்று சொல்ல எமது சமுகத்திடம் இருக்கக்கூடிய அந்த வலுவான காரணம் தான் என்ன??
·         முதலாவது நோய். கண்டதையும் சாப்பிட்டால் வயிற்றில் நோய் வரும் என்பது முதல் காரணம்.
·         குழந்தை உருவாகி விடலாம் என்ற பயம். (மேற்கூறப்பட்டவை முழுமையான உடலுறவை தடுக்க காரணம்)
·         இன்னொரு பெண்ணுடன் நட்புறவு (பாலியல் ரசம் உள்ள) இருந்தால் எதிர்காலத்தில் மனைவியுடனோ கணவனுடனோ 100% தங்கியிருப்பு இருக்காது. காதலாகி விடுமோ என்கிற பயம்.(ஆணாதிக்ககொள்கை மேலோங்கி நிற்கும்)
·         சீதனம் இல்லாமல் போய்விடும்.
·         பெற்றார் பேரியாரை விட வேறொருவர் முக்கிய்டமான பொருளாக மாறிவிடுவர்.
இப்படியான காரணங்கள் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ஆண் பெண் நட்பின் சந்தை விலை அதிகமாக இருப்பாதால் தான் இந்த நட்புகளெல்லாம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சமுகம் மறந்து விடுகிறது.
ஒரு பையன் பெண்ணுடன் நட்பை சகஜமாக ஏற்படுத்திக்கொள்வதில்லை. ஏதோ விசேட சித்தி பெறுவது போல தான். (சிலருக்கு அடிக்கடி விசேட சித்தி கிடைக்கிரதும் சலருக்கு கிடைக்காம போறதும் இயல்பு நிலைகளே)
அந்த விசேட சித்தி களவாக அல்லாது விசேடமானதாக கடைப்பிடிக்கப்படும்போது தான் அது தவறான பாதையில் காலடி வைக்கிறது.
ஆண்கள் பெண்கள் எல்லாரும் எல்லாருடனும் பேசி பழகி இருப்பார்களேயானால் எவருக்கும் எவருடனும் தனிப்பட்ட ஈர்பு இருக்காது. தாயுடன் இருக்கையில் தாயின் அருமை புரிவதில்லை என்பது போல..எதிர்பால் நண்பர்கள் எராளம் இருந்தால் அதன் தனிப்பட்ட தேவைகள் இருக்காது..
பாலியல் ரீதியான தேடல்கள் இருக்காது. தினமும் போதுமான் அளவுக்கு காலையிலேயே சாப்பாட்டை பெற்றுக்கொள்ளும் ஒருவன் பக்கத்து கடையில் வாங்கி உண்ண யோசிக்க மாட்டான். அது அவனுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாக இருக்காது.
அப்படி வித்தியாசமான் ஒரு காரியம் செய்ய அவன் துணிகிற பட்சத்தில் அவனுக்கோ அவளுக்கோ அதன் அர்த்தம் இலகுவாக புரிந்துவிடும்.
அது போக எதிர்ப்பாலார் பற்றிய அறிதல் தான் கூடுதலான எதிர்பால் நட்பிற்கு ஆதாரமாக இருக்கிறது என பாகம் இரண்டிலே குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் எல்லோரும் சகஜமாக பழகுகிற நிலையில் எவருமே எதிர்பாலார் பற்றிய அறிதல்குக்கு தூண்டப்பட மாட்டார்கள்.
இதை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் என பார்க்கையில்: மீண்டும் சொன்னது போல…சாதி, அந்தஸ்து, காதல், டிமாண்டு (என் பையண்ட டிமாண் குறைஞ்சிடும்----சீதனத்தில)…இது போன்றா ஆதிக்க சித்தனைகளே அடிப்படை காரனம்…
ஆனா இன்று இந்த சிந்தனை இல்லதவனும் அதை கடைப்பிடிக்கிறான்.
றோட்டில போறப்போ ஒரு பெண் ஒரு ஆணை கண்டு வேற்றுக்கிரகவாசியை பார்ப்பது போல் பார்த்து செல்கிறாள் என்றால் நிச்சயம் அவளுக்கு ஆண் நண்பன் இருக்கிறான். என்பதே அர்த்தம்..ஏனெனில் அவாள் மனதில் இருப்பதெல்லாம் என்னோட கதைக்கிர நண்பனைத்தவிர மற்றவனெல்லாம் கள்ளன்…
இந்த உறவுகலில ஏதோ ஏமாத்தப்படுறது (பாலியல் ரீதியாக மட்டுமண்றி, மனோ ரீதியாக ) ஏதோ பெண்களாக த்தான் ஒருக்கிறார்கள்.
அவர்கள் பிற ஆண்களை பற்றி தவறாக எண்ண வைக்கப்படுகிறார்கள். மொத்தத்தில் ஆணாதிக்கக்கொள்ளை இன்று பரவுவது இந்த ஆண் பெண் நட்பின் மூலமாக தான் என்பது எனது அடுத்த நம்பிக்கை.
இனி தொடர் பதிவுன் முடிவிற்கு வருவோம்..
களவும் கண்ணியமும்..
ஒரு கண்ணியமான உறவை களவாக செய்ய வைத்தது இந்த சமுகம்.
இன்று அது களவாக இருந்தால் அது கண்ணியமானது என பெயரிட நினைப்பதும் அதே சமுகம்.
கண்ணியமான பெயரைப்பயன்படுத்து தாங்கள் களவு(தப்பு) என்று சொல்லுற ஒன்றை முழுமையாகவோ பகுதியாகவோ செய்வது அல்லது அனுபவிப்பது என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது..
இதில் நாங்கள் பாலியல் ரசம் இல்லாமல் உறவு வைத்திருக்கிறோம் என மார்தட்டும் பெண்களும் சரி ஆண்களும் சரி பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிரார்கள் என்பது தான் உன்மை. அதிலும் சிலர் தாங்கள் தப்பாக பேசுவதில்ல்லை..தப்பாக நினைப்பதில்லை ஆகவே நாம் கண்ணியமான உறவில் இருக்கிறோம் என நினைப்பது சரியல்ல.. முற்றிலும் தவறே..பாலியல் உண்ர்வு என்பது மனிதன் கேட்டு பெறும் ஒன்றல்ல. அது இயல்பாகவே நடந்தேறுகிறது. இதில் கவனிக்க வேண்டியது நமது நட்பில் பாலியல் ரசம் இருக்கிரது என தெரிந்து பழகுவதுலிருக்கக்கூடிய நன்மைகளை பதிவு செய்து பதிவை முடிவுக்கு கொண்டு வருகிரேன்..
·         பாதுகாப்பு.
·         ஆணாதிக்கக் கொள்கை பராவாமல் இருக்கும்
·         தங்கி வாழும் நிலை கொஞ்சமாவது குறையும்
·         பயம் குறைந்து துனிவு அதிகமாகும்.(பெண்களுக்கு நிச்சயம்)
·         சமுகம் பற்றிய தவறான எண்ணம் விலக்கப்படும்.
·         உலகம் தெரியாத பெண்கள் சமுதாயம் உருவாக்கப்படாது.
·         கணவன் மனைவிடையே (எதிர்காலத்தில்) நல்ல புரிந்துணர்வு (fresh understanding) உருவாகும்..ஆரோகியமான குடும்பவாழ்வ்வு உருவாகும்.
·         உன்மையில் நல்லா நித்திரை கொள்ளலாம்.
·         சிந்தனைக்கான வாய்ப்புகள் (thinking space ) அதிகரிக்கும்..

No comments:

Post a Comment