Monday, October 17, 2011

களவும் கண்ணியமும்- பாகம் 2


களவும் கண்ணியமும் பாகம்-1ற்கு கிடைத்த வரவேற்புகள் எனக்கு தந்த உத்வேகத்திலும் பார்க்க அதை பார்த்து முகப்புத்தகத்தில் நேரடியாக கருத்துக்கூற முடியாமல் தனிப்பட்ட செய்தி மூலம் பலர் தமது விரக்தியை வெளியிட்டமை என்னை பாகம் இரண்டை எழுதுவதற்கு தூண்டியது என்பது ஏதோ உன்மைதான். இருந்தாலும் பகிரங்க வரவேற்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கொஞ்சம் மனக்கவலை….எண்றாலும் கைப்புள்ள சளைக்கலபாகம் 2 எழுதியாச்சு….
பாகம்-1 உறவு மாயையை வெளிப்படுத்தியிருந்தேன்..
பாகம்-2 உறவுகளின் தேவை மற்றும் அதன் வளர்ச்சி பரிணாமங்களை         பற்றியதாயிருக்கும்.
சாதாரனமாக  சமுதாயத்தில் இளைஞர் /யுவதி எவரை  எடுத்து  நோக்கினாலும், அவர்கள்  ஒவ்வொருவருக்கும்  ஒரு  எதிர்ப்பால் தொடர்பு  தனித்துவமாக இருக்கத்தான் செய்கிறது. இதை தவறு  எனக்கூறுவதும் அப்பட்டமான தவறு. ஆனால் தாம் எவ்வகையான தொடர்பிலிருக்கிறோம், இந்த தொடர்பு எந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது பலருக்கு தெரியாமல் இருப்பது தான் இன்று கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
உதாரணமாக: ஒரு எதிர்ப்பால் நண்பர்கள் தமக்குள் உரையாடுகையில் நேரம் செல்வது கூட தெரியாமல் அள்வளாவுவார்கள். ஆனால் அவர்கள் பேசும் பொருளை அராய்ந்தால், அங்கே குறித்த நாளில் அவ்விருவரும் என்னென்ன செய்தனர் என்பதையே ஐன்ஸ்டீன் லெவெலில் ஆராய்ந்திருப்பார்கள்.
நீர் விடிய என்ன சாப்பிட்டனீர்…?” என்பதில் தொடங்கி  ”பேந்துபேந்துஎன்று டுக்கி கதை நீண்டுகொண்டே போவது தான் வழமை. ஆனால் ஒரே வீட்டில் இருக்கும் சகோரனோ  அல்லது பெற்றாரோ சாப்பிட்டுதுகளா என்ற கேள்வியே இடம்பெற்றிருக்காது.
மேலும் கல்லூரிகளில் கல்விபயிலும் இரண்டு ஆண் நண்பர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள்..அதில ஒருத்தனுக்கு வயித்து குத்தாக இருக்கும்..ஆனால் பாயில பக்கத்தில படுத்திருக்கிறவனுக்கு அந்த விடயம் தெரிய முதல் 2 கிலோ மீட்டர் தூரத்தில அம்மா பக்கத்தில படுத்து தூங்கிற நண்பிக்கு தெரிந்துவிடும்-மூணு பேரும் ஒரே வகுப்பில தான் படிப்பார்கள்.
இது ஏன் இவ்வாறு நடக்கிறது என்ற தேடல் எனக்குள் நெடுகாலாமாக இருந்தது. காரணங்களை ஆராய்ந்து போகையில்….
பொதுவாக எதிர்ப்பாலார் பற்றி அறிவதில் உள்ள ஆர்வம் தான் அடிப்படைக்காரணமாக உள்ளது. அதாவது எதிர்ப்பாலர் எப்பிடி எப்பிடி எல்லாம் சிந்திப்பார்கள், எப்பிடி நடந்துகொள்வார்கள், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, காலையில் என்ன செய்வார்கள், பிரத்யேகமாக அவர்கள் வைத்திருக்கும் விடயங்கள் என்ன, கோபம் வந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், எப்போது சிணூங்குவார்கள், எப்போது அனுங்குவார்கள் இது போன்ற விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் தான் இந்த எதிர்ப்பால் ஈர்ப்பிற்கு அடிப்படைக்காரனம்.
இதில் தமது தனித்துவத்தன்மைகளை பெருமையாக சுவாரஸ்யமாக எதிர்ப்பாலாருக்கு கூறுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆக இந்த தகவல் பரிமாற்றம் ஐந்தாம் உலக யுத்த தகவல் பரிமற்றம் ரேஞ்சில நடக்கிறது என்பது தான் காமெடி.
இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் எதிர்ப்பால் சகோதரர்களுடன் பிறந்திருப்பவர்கள் கூட பிறிதொரு எதிர்ப்பால் நண்பரின் செயற்பாடுகளை அறிவதிலேயே ஆர்வம் காட்டுவாரே தவிர சகோதரத்திடம் அல்ல. இது நான் பாகம்-1 இல் குறிப்பிட்டதை போல கூடப்பிறந்தவர்களிடம் பால் அடிப்படையிலான பார்வை இருக்காது என்பதே காரணமாகும்.
மேலும் இப்படி அறிந்துகொள்வதிலுள்ள ஆர்வத்தால் ஏற்படும் தொடர்புகள் ஒவ்வொன்றின் போதும் சிறிது சிறிதாக ஓமோன் தனது வேலையை காட்ட ஆரம்பிக்கும். அதாவது இவ்வாறான எதிர்ப்பால் உரையாடல்களின் போது ஒரு சிறு அளவிலான ஓமோன்களும் கூடவே சுரந்தவாறு இருப்பது ஒரு வித இன்பத்தை கொடுக்கிறது. அந்த இன்பம் மகிழ்ச்சியாக அடையாளம் காணப்படுகிறது.
அந்த மகிழ்ச்சி மனதிற்கு இதமானதாக அடையாளம் காணப்படுகிறது. மேலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலோ, கோபமான சந்தர்ப்பங்களிலோ, வெறுமையான சந்தர்ப்பங்களிலோ அந்த எதிர்ப்பாலாருடனான பேச்சு ஒருவித உற்சாகத்தை அல்லது relief  கொடுப்பதாக உணர்ந்து கொள்வார்கள்.
இந்த இதமான இன்பத்தை பாலியல் என்று கூறவும் முடியாது. ஆனால் இவை அனைத்தும் பாலியல்பினை அடிப்படையாக வைத்து உருவானவையே. இவ்வாறான இன்ப நேரங்கள் ஒவ்வொன்றிலும் பாலியல் ரசம் இருப்பது என்பது மறுக்க முடியாததொன்றே..
ஆனால்இந்த இன்பநிலை இத்துடன் முடிந்துவிடுமா என்பதில் தான் சமுகத்தின் பிரச்சனை தங்கி இருகின்றது.
இந்த இன்பநிலையை இழப்பதற்கு எவரும் தயாராக மாட்டார்கள். ஆனால் குறித்த இன்ப நிலையை ஈடு செய்யக்கூடிய பிறிதொரு தொடர்பு கிடைத்தான் ஏலவே இருந்த தொடர்பை விட்டு விலக முடியும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இந்த நிலை நீடித்தால் நிகழ்வது என்ன…?
குறித்த அந்த இன்பநிலையை இழந்துவிடுவோமோ என்ற ஏக்கம் அவர்களிடம் உருவாக ஆரம்பிக்கும். அந்த இழப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த நண்பர்கள் எடுக்கும் முடிவுகள் தான் சுவாரஸ்யமானது.
காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது, சகோதரம் என்ற அந்தஸ்தை பெறுவது, நட்பு அந்தஸ்தை பெறுவது போற பல முடிவுகள்.
ஆனால் இதில் உடலுறவில் ஈடுபட்டு விடுவது என்னும் தீர்மானமும் சில சமயங்களில் மேற்கொள்ளப்படுவது தான் வினோதமானது.
மேற்படி ஏற்படுத்தப்படும் உறவுகள் அவர்களுக்கிடையில் ஒருவகை இன்ப பரிமாற்றத்தை ஏற்படுத்தி வந்தாலும், அந்த இன்ப அளவு மாற்றமில்லாமல் இருந்தால் அலுத்துவிடுவது மனித இயல்பு.(பழக பழக பாலும் புளிக்குமாம்). அந்த இன்பநிலையில் மாற்றங்கள் கூட அவ்வப்போது ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை உணரப்படும்.
இந்த மாற்றத்திற்காகவே எதிர்ப்பால் நண்பர்கள் முட்டையில் மயிர் பிடுங்கியது போல சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் சண்டை பிடித்து கொள்வார்கள்.. பின்னர் கடல் அலை கரையை அரித்து முன்னேறுவது போல இன்ப பகிர்விலும் முன்னேற்றங்கள் பைய பைய நடந்தேறும்..
பார்வையில் தோன்றிய இன்பநிலை, முகப்புத்தக இணைப்பு, முகப்புத்தக உரையாடல், தொலைபேசி Missed call, தொலைபேசி உரையாடல், நேரடி சிரிப்பு, நேரடி பேச்சு (எதேட்சையானது), திட்டமிடப்பட்ட நேரடி சந்திப்பு, நக்கல், நையாண்டி, நோண்டி, வஞ்சனை, எள்ளி நகையாடல், தள்ளல், அடித்தல், குத்தல், கட்டிப்பிடித்தல் என பகிரங்கமான நட்புறவுச்செயற்பாடுகள் என்ற பெயரில் இன்ப பரிமாற்றங்கள் நடைபெறும்.
இதில் அடுத்த கட்டம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் என்பது பாதுகாப்பு என்ற போர்வையில் ஆரம்புக்கும்இந்த பாதுகாப்பு விவகாரமே கொஞ்சம்ம் விவகாரமானது தான். யாருக்கு யார் எதிலிருந்து பாதுகாப்பு வழங்குவது என்ற விவஸ்தை கூட அங்கே இருக்காது. நேரம் தாழ்த்திய பயனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஆரம்பித்து, நேரத்துடனான பயணங்களுக்கும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
இதில் பெண்களினுடைய சுபாபம் அதிகமாக செல்வாக்கு செலுத்துகிறது. பயப்பிட்டால் தான் பெண்மை என்பதற்காகவே பயப்பிடுவது கூட இன்று பல பெண்களிடம் அவதானிக்கக்கூடிய விடயம். அச்சம் மடம் நாணம் எண்ற பெண்ணியல்புகளில் அச்சத்தை மட்டும் சில பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள் எண்டால் அது உன்மை தான். சில வேளை பெண்ணாக இருக்கும் முயற்சியில் பெண்மையில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை முதலில் follow பண்ண try பண்றாங்களோ தெரியலை
ஆனால் ஆண் நண்பன் கிடைக்கும் வரை தனியாக செய்ற்பட்ட பெண்களுக்கு ஆண் நண்பர்கள் கிடைத்த பின் ஏனோ எல்லாவற்றிற்கும் துணை தேவைப்படுகிறது. அதாவது தாண் பெண் தனக்கு பயம் இருக்கிறது என்க்காட்டி ஆண் நண்பனை தன்னை பற்றி சிந்திக்க வைக்க வேண்டும் என்கிற ஒரு நோக்கம் தொக்கி நிற்கும்.
ஆனால் ஆண்களும் இந்த பயம் பாதுகாப்பு விவகாரத்தில் கணிசமான பங்கெடுத்துவிடுகிறார்கள். முதலில் பெண்களை பயப்பிடுத்துவதே ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.. அது தந்தையர்களாக இருந்தாலும் மறுப்பதற்கில்லை. ஆனால் தான் பயப்படுத்தப்பட்டதால் அந்த பயத்தை தலை முறை தலை முறையாக கடத்துவதில் பெண்கள் முன்னிற்கிறார்கள்.
நட்பில் ஆண்கள் பெண்களிற்கு இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி பயத்தை உண்டுபண்ணி அவர்கள் பயப்படுவதை பார்க்கையில் ஒரு இன்பம் காண்பார்கள்.. மேலும் அவர்கள் பயப்பிடும் விடயங்களில் தங்களுக்கு பயம் இல்லை என்பதில் ஒரு பெருமிதத்தையும் உண்ரகிரார்கள்.
இந்த பய நிலைமைகள் பாதுகாப்பு ஒன்ரை தேட வைக்க, நண்பர்கள் வீதிப்பாதுகாவலர்களாக மாறுகின்றனர். இந்த பாதுகவல் தொழில் எதிர்ப்பாலர் இருவருக்கு தனிமையை கொடுக்கிறது. பின்னர் அவர்கள் பகிரங்கமாக வைத்திருந்த உறவுகள் (பகிரங்கம் என்பதால் புனிதமானது என பெயரிடப்பட்டிருந்தது) தனிமையில் கொண்டாடப்பட ஆரம்பிக்கின்றது.
இனி என்ன கொண்டாட்டம் தான். கொண்டாட்டம் அடித்தல் குத்துதல் நுள்ளுதல், கட்டித்தளுவல், மடி மேல் அமர்தல், கன்னத்தில் முத்தமிடல் என வளர ஆரம்பிக்கும்.
எனவே பாலியல் சேஷ்டைகள் ஆரம்பித்து விட்டிருக்கும். ஆனால் முளுமையான பாலியல் உறவு என்பது இலகுவில் அடைந்துவிட முடியாததொன்றாகவே இருக்கிறதுஅது பற்றிய விளக்கங்கள் காரணங்களை அடுத்த பதிவில் ஆராயலாம்……தொடரும்….


No comments:

Post a Comment