Thursday, August 18, 2011

கழிவுகளின் கலாட்டாக்கள்


நீண்ட நாட்களாக களத்துக்கு வராமலிருந்த பதிவொன்று இன்று……..
எல்லாம் அந்த குத்தியா இருக்கிறவன பற்றித்தான் .ஏற்கவே ஒரு பதிவு என்னொரு கழிவால எழுதப்பட்டு இருக்கிறது இது இன்னொரு கோணத்தில என்னால முடிஞ்சது..

அவன் பிறந்தது இணுவிலில. இணுவில் பாவம் செஞ்சுதோ, அவனை பெத்த திரு.செல்வராசா தவஞ்செய்யிறதுக்கு பதிலா பாவம் செஞ்சிட்டாரோ தெரியல. சில வேளை பிச்சைக்காரனுக்கு பண உதவி செய்யிறன் எண்டு போய் முழுக்குடிகாரனுக்கு பிச்சை போட்டிச்சனையோ தெரியாது. நிச்சயமா யாரோ ஏதோ செஞ்சிருக்கணும்.இல்லையெண்டா உப்பிடி ஒண்ட உலகத்துக்கு வரவளைச்சிருக்கேலாது.

”புறம்போக்கு” எண்டா வரைவிலக்கணம் அவன் தான். ஆறாம் ஆண்டில, யாழ்ப்பாணத்தில பொதுவா புறம்போக்குகள் படிக்கிற/படிச்ச பள்ளிக்கூடத்தில காலடி எடுத்து வச்சவன் தான்.

பள்ளிக்கு வாறது ஏதோ தகப்பனார்ட மோட்டார் சைக்கிள்ள தான். பவ்வியமா வந்து இறங்குவானாம். (இறங்கேக்க நான் கண்டதில்ல. ஏனெண்டா அவ்வளவு பவ்வியம். இவன் தான் இறங்கிறான் எண்டதுக்கு எந்த ஒரு அடையாளமும் இருக்காது). ஆனா பவ்வியமெல்லாம் மோட்டார் சைக்கிள் யூ ரேண் (“U”turn) அடிக்கும் வரை தான்.

வாயில வாற முதலாவது வார்த்தையே கழிவு எண்டுதான். (அது நம்ம பள்ளிக்கூடத்தில குப்பை கொட்டின எங்களுக்குள்ள ஒரு தோழமை வார்த்தையா மாறினது வரலாறு). பேந்தென்ன எல்லா கழிவுகளும் ஒண்டா சேந்து பிறேயர (Prayer) எப்பிடி கட்(cut) பண்ணலாம் எண்டு பிளான்(plan) பண்ணுறது தான். வழமை போல படிச்ச பிறிபெக்ட் அண்ணமாருக்கு வர அருவருக்கிற இடம் கக்கூஸ் தான் தஞ்சம். ஒண்ணுக்கு ரெண்டுக்கு எண்டா எங்கயாவது வெட்ட வெளியை தேடிப்போறதுகள் பிறேயர் கட் பண்ணுறதுக்கு மட்டும் தான் கக்கூஸ் பக்கம் போனது. வழமையா பெடியள்/அப்புக்கள் எங்கயாச்சும் மறைவு பனை தென்னை வடலிகளை தேடி தான் ஒண்னு ரெண்டு நடத்திறது. ஆனா இவனும் இவனோட சேந்ததுகளும் மாறி. அதுக்கு பல காரணம் வேற.

  • ·         வெட்ட வெளியில நல்ல காத்தோட்டமா இருக்கும். நெடுகலும் மூடி இருக்கிற ஏரியாக்கள் (area) கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்.
  • ·         எறியம் போன்ற விஞ்ஞான கருத்துக்கள் மற்றும் தமிழ் இங்கிலீஸ் எழுத்துக்கள் எழுதிப்பழகலாம்.
  • ·       யார்டயாச்சும் வீட்டு வளவா இருந்தா துரத்திறவன தூரத்திலயே கண்டு ஓட வசதியா இருக்கும்.
  • ·         பெரிய மனுசர் ஒண்ணு ரெண்டு போறத நாலுபேர் பாத்தா பெருமை தானே
  • ·         ஆனாலும் கிட்ட நிண்டு பாத்து ஒளிவா நிண்டு படமெடுத்துவாங்கள்
இப்பிடி ஒவ்வொரு விசயமும் பல காரண காரியங்களின் அடிப்படையில தான் செய்வினம்.

கக்கூஸ் மணம் எல்லாம் இவங்களுக்கு பழகிப்போன ஒண்டு. அதே கக்கூஸ்ல தான் பெரிய பெரிய திட்டங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கட் மச்சுகளில எடுக்கிற பெரிய தீர்மானங்கள் எல்லாம் எடுக்கப்படும். திட்டங்கள் எண்டு குறிப்பா சொல்லப்போனா

  • ·         இண்டைக்கு எத்தினையாவது பாடம் இன்ரெவல்(Interval) விடுறது.
  • ·         எந்த ஆண்டில எந்த வகுப்பில சாப்பாட்டு பெட்டி திருடிறது.
  • ·         யார்ட சாப்பாட்டு பெட்டிய களவெடுக்கிறது.
  • ·         எத்தினையாம் பாடம் மீள கக்கூஸ் மீற்றிங்(meeting) போடுறது
  • · எத்தினையாம் பாடம் கிரவுண்ஸ்(Ground) வைரவர் கோயிலுக்கு பின்னால போய் தூங்கிறது.
  • ·         பிறின்சி விடுற இன்ரெவலுக்கு(Interval) என்ன செய்யிறது.
  • ·         எந்தெந்த பாடத்துக்கு வகுப்பில நித்திரை கொள்ளுறது
  • ·  நாளைக்கு பள்ளிக்கூடம் வாறதால தொழில்ரீதியான முன்னேறம் மற்றும் பின்னடைவுகள்.
  • ·         பள்ளிக்கூடம் வந்தா எப்ப வீட்ட போறது-எத்தின மணிக்கு
  • ·         வீட்ட நிண்டா என்ன செய்யலாம்.
இப்பிடி பல திட்டங்கள்.

இது போக சாப்பாட்டு பெட்டி திருடுறதில பல டெக்னோலொஜிகள்(Technology) பயன் படுத்துவாங்கள். அதில சிறப்புத்தேர்ச்சி.
  • ·         யார்ட அம்மா நல்லா சொதி வப்பா.
  • ·         யார்ட அம்மா நல்லா பொரிப்பா.
  • ·         யார்ட அம்மா பெடியனுக்கு பள்ளிக்கூடத்துக்கு மச்சம் குடுத்துவிடுவா (நம்ம ஸ்கூலில மாமிசம் தடையாம் எண்டு சொல்லுறவங்கள்).
  • ·         யார்ட அம்மா சோம்பேறி.(பான் கொண்டுவாறவங்கள்).
  • ·         யார்ட புட்டு யார்ட பொரியல் யார்ட சம்பல் சேத்தா நல்ல கலவை கிடைக்கும்
இப்பிடி பல தேர்ச்சிகள்.

அது போக வாத்திமாரை கடுப்பேத்தி அல்லது உசுப்பேத்தி பாடவேளையில கதை சொல்ல வைக்கிறது. வகுப்பில இருக்கிறா 40 பேருக்கும் வாத்தியார் அடிக்கிற மாரி ஏதாவது மர்ம செயல்பாடுகளை செய்து பாடவேளையை பிறீ(free) ஆக்கிறது. பிரம்பு முறிஞ்சு புது பிரம்பு மாத்திற தறுவாயில சேப்பா போய் லைற்றா அடி வாங்கிறது இப்பிடி பல சிறப்புத்தேர்ச்சிகள்.


பெடியளிண்ட பெயர கூப்பிடிறதில ஏதோ இவங்களுக்கு அருவருப்பு..ஆளாளுக்கு சிறப்பு காரணப்பெயர் வைக்கிறது தான் இன்னும் சுவாரசியம்.
உதாரனத்துக்கு:
  • ·         திறப்போட்டை கோபி…..
  • ·         ஆட்டடி அமல்…..
  • ·         வெடிச்ச காச்சட்டை
  • ·         படத்தான்
  • ·         எடுப்ஸ்
  • ·         நாய்ப்பால்
  • ·         ஜம்பர்
  • ·         கோழி
  • ·         அம்மம்மா குழல்
  • ·         மாங்கொட்டை ஸ்பின்னர்
  • ·         சட்டி
  • ·         கறுப்பாண்டி
  • ·         பாண்டி
  • ·         ஓதம்
  • ·         சாமி
  • ·         முக்கி
  • ·         சுக்கி
  • ·         சொப்பி
இப்பிடி நிறைய….

அது போக பள்ளிக்கூடத்தில முழுநிலா விடுமுறை விட்ட மாரி ஒரு காலம். விளையாட்டு போட்டி காலம். எப்பிடியாச்சும் மாச் பாஸ்ற்(March-past) செய்யிறதில இருந்து தப்பீடணும் எண்டதிலயே குறியா இருப்பாங்க. ஆனா மாச் பாஸ்ற் பிறக்ரீஸ்(March-past practice) எண்டு சொல்லி வகுப்பில இருந்து எழும்பி போயிடணூம்.அதில ஹவுஸ்(House name) பேர் சொல்லேக்க 2 நாள் ரெண்டு பேர் சொல்லி பிடிபட்ட வரலாறும் இருக்கு.அது போக ஹவுஸ் ரீச்சர்(House teacher) வரச்சொன்னார் எண்டு சொல்லி அந்த ஹவுஸ் பொறுப்பாசிரியரிட்டயே பர்மிசன்(permission) கேட்டு உதை வாங்கினதும் இருக்கு. குளுக்கோஸ் தின்னுறதுக்கெண்டா எந்த ஹவுஸ் கொடியையும் காவ ரெடி. ஸ்போட்ஸ் மீற்(Sports meet) அன்று இடைவேளை நேரம் மட்டும் பிரசன்னமாயிருப்பாங்கள்..

சரி இதெல்லாம் ஓ எல்(O/L) லில மட்டும் தான் எண்டு பாத்தா…
ஏ எல்(A/L) லியும் தகப்பனார்ட மோட்ட சைக்கிள்ள பின்னுக்கிருந்து தான்…
பள்ளிக்கூடத்துக்கு எண்டு வாறது. முதல் 2 பாடமும் ரவீந்திரநாதன் சேர்ட பாடம். வகுப்பில ஒருத்தனுக்கும் அந்தாள் படிப்பிக்கிறது விளங்காது. ஆனா இந்த கோகுலனுக்கு மட்டும் விளங்கும். அந்தாள் பிசிக்ஸ(physics) தமிழில படிப்பிச்சாலே ஒண்டுக்கும் விளங்காது. அதுக்குள்ள அந்தாள் இங்கிலீஸு சிங்களம் எண்டு ஒரு பன்மொழி தயாரிப்பு.. தலைவர் கொம்பனி குடுக்காததால எல்லாம் வகுப்பிலயே இருக்குங்கள்.. முதல் பாடம் எண்டதால அவங்கள் நித்திரையும் கொள்ளேலாம அள்ளவும் முடியாம மெள்ளவும் முடியாம திண்டாடுவாங்கள்..

ரெண்டாம் பாடம் முடிஞ்சதும் சுரேந்திரா மிஸ் வந்தீடுவா. அவாவ கண்டதும் எல்லாருக்கும் ஒரே அடியா ஒண்ணுக்கு வந்திடும். தப்பா நினைக்கக்கூடாது,மனுசி தங்கம். இவங்கள் பாடம் கட் பண்ணுறதுக்காக எல்லாரும் பாத்றூம்(Bathroom) பாத்றூம் எண்டு கிளம்பீடுவானுகள்..பேந்தென்ன கக்கூஸில மாநாடு தான். மாநாட்டிண்ட பிரபலத்தால வேற வகுப்புகளில இருந்தும் சனம் கணக்கா போய் கூடீடும்.
அங்க தான் பிஸிக்ஸ்(Physics0 கெமிஸ்ரி(Chemistry) பயோவில(Biology) பெரிய பெரிய கண்டுபிடிப்புக்கள் நடக்கும். கக்கூஸ் சுவரில தான் கோகுலன் ஆதியோர் மாற்றீடு படிச்சவங்கள். இவங்கள் மாற்றீடு படிச்சதில பாவம் எங்கட ஸ்கூலில படிப்பிச்ச மிஸ்மார் எல்லாருக்கும் புதுசா பல பிள்ளைகள் பிறந்திட்டுது. கலியாணம் கட்டாத செல்வி செல்ல….. மிஸ்ஸ கூட விட்டு வைக்கேல்லை. ஒண்ணுக்கடிக்க வாற மக்கர் இத பாத்திட்டு ஒவ்வொரு கிளமையும் பெயின்ற் அடிக்க வெளிக்கிட்டு பிறின்சிட்ட பேச்சு வேண்டின கதை வேற. அந்தாளிட பிரச்சனை என்னண்டா சனி ஞாயிறில எங்கட ஸ்கூலில செமினார்(Seminar) நடக்கிறது. அப்ப வெளியாக்கள் பாத்தா தான் தான் இந்த ஸ்கூலில இருக்கிற கிளவிகள் எல்லாரையும் மேக்கிறன் எண்டு தப்பா நினைச்சிடுவாங்கள் எண்டது. அந்தாள் பெயின்ற் அடிச்சு களைச்சுப்போய் கடைசியா இவங்கட வழிக்கே வந்திட்டுது. ஒரு பேனை மை(Ink) போத்தில வேண்டி இவங்கள் எழுதினதுக்கு மேல தானே ஊத்தி ஊத்தி விட்டிச்சுது. கடசியா புறிஞ்சுப்பலே(Principal) அந்த கண்டறாவிய பாத்திட்டு ஒவ்வொரு மாசமும் பெயின்ற் அடிக்க பெர்மிசன்(Permission) குடுத்திட்டுது..

ஏ எல்(A/L) பக்கம் எல்லாத்துக்கும் 2 வாசல். (நுளைவாயிலை தவிர). கன்ரீனுக்கு(Canteen) ரெண்டு வாசல். கக்கூஸுக்கு 2 வாசல். ஏனெண்டு கேட்டா ஒரு வாசல் எண்டா பிறிஞ்சுப்பலோ வாத்திமாரோ வந்தா உள்ளுக்கு நிக்கிற பெடியள் வெளியில போகேலாது. அவங்கள் எல்லாரும் நிண்டா இந்த வாத்திமார் உள்ள போகேலாது.இடமிருக்காது. அதனால 2 வாசல். ஆனைவரும் பின்னே மணீயோசை வரும் முன்னே எண்ட கணக்கிலவாத்தியார் வரேக்கயே இருமிக்கொண்டு தான் வாறது.

இதில மதில் பாயிறது எண்டது அடுத்த கதை. எங்கட பள்ளிக்கூட ஏ எல் வகுப்புகளில சுத்திற யன்னல். ஒரு கம்பி தான். கொஞ்சம் மெல்லீசா இருக்கிறவங்கள் அதுக்குள்ளாலயே போயிருவாங்கள்… ஆனா பெரும்பான்மை வாசலால தான் போய் வாறது. கொப்பி புத்தகம் பாக்(bag) எண்ட கதை எல்லாம் அங்க இல்லை. எல்லாம் ஸ்கூல்லயே வகுப்புக்க தான் வச்சிட்டு போறது. எதயுமே வீட்ட கொண்டு போறதில்ல. வீறா நடந்து வாசலால வெளில போறது தான். ஆனா பாவம் அப்பாவோட வாறதால கோகுலன் ஏதோ பெருசா போறதில்ல. ஆனா எவனாச்சும் பாதுகாப்பா கொண்டுபோய் விடுவன் எண்டு சொன்னா தாவீடுவான். இவனை சைக்கிலில கொண்டுபோய் சைக்கிள் போக் உடைஞ்சது கூட நடந்திருக்கு. வீட்ட போனா நல்லா கூலா ஒரு ட்றிங்ஸ்(drinks) தருவா கோகுலண்ட அம்மா. அதுக்காகவே இவனை வீட்ட கூட்டிக்கொண்டு போற சனம் நிறைய. ஆனா வீட்ட போக அம்மா இவனை நினைச்சு கவலையா ஒரு வார்த்தை சொன்னது எனக்கு இன்னும் மறக்கேலாது..

”தம்பி இவன் என்ன இப்பிடி ஒரே குத்தியா வளருறான்.உடம்பில ஒரு வளைவு சுழிவையும் காணேல்லை”.
 அந்த அம்மாக்கு இப்பிடியொரு கவலை…

சயன்ஸ்கோலில படிச்சதுதான் அடுத்த கலிகாலம்.குமரஞ்சேர் சிவத்திரஞ்சேர்,கெங்கா சேர், தம்பிராயா சேர் எண்டு எல்லாரையும் கையில போட்டு வச்சிருந்துகொண்டு இந்திய தமிழ் சினிமா வில்லன் மாரி தன்னை நல்லா ஸ்தாபிச்சு கொண்டவன். சிங்க்கம் படத்தில பிரகாஸ்ராஜ் பற்றி அறிமுகம் குடுக்கேக்க பலம் பலவீனம் எல்லாம் சொன்ன மாரி இந்த குட்டி வில்லன்ர பலம் பலவீனம் ரெண்டுமே இவன்ர படிப்பு தான். அதவச்சு சேர்மார கட்டிப்போட்டான்-பலம். இவண்ட படிப்பால இவன் பேமஸா இருந்ததால இவன் செய்யிறது எல்லாமே வெளிச்சமாயிடும்.-பலவீனம். கள்ளனுக்கும் வில்லனுக்கும் இருட்டு பலம், வெளிச்சம் பலவீனம். இங்க எல்லா லைட்டும் இவன்ல தான். எண்டாலும் அற நனைஞ்சவனுக்கு கூதல் என்ன குளிர் என்ன எண்டு இவன் செஞ்ச அட்டகாசங்கள் எண்ணிலடங்காதவை.

சத்தியமா நான் களைச்சு போனன்.மீதி நிறைய இருக்கு. இந்த படத்தில இப்பதான் இடைவேளை.மிச்ச பாகம் வெகு விரைவில்…….


6 comments:

  1. களத்தில பூந்தாச்சா? இந்த வருசமும் ரெண்டு பதிவா?

    ReplyDelete
  2. super machan amarash nice job

    திரு.செல்வராசா தவஞ்செய்யிறதுக்கு பதிலா பாவம் செஞ்சிட்டாரோ தெரியல.
    ok but kunasingathar.........ha ha..........

    Friend's follow this link

    http://jhc07.blogspot.com

    ReplyDelete
  3. gud keep it up.Gunasingatharin kannia padaatha varikkum.

    ReplyDelete
  4. எல சுகாணன் என்ன பேச்சு பேசுறா நீ..யாரப்பாத்து என்ன பேச்சு...

    ReplyDelete
  5. மச்சான் இதில லைக் வசதி இல்லையோ...

    ReplyDelete