Wednesday, August 18, 2010

கல்லூரி கலாட்டாக்கள்

கல்லூரி காலத்தில நாங்கள் செஞ்ச திருகுதாளங்கள பற்றி ஒரு குறிப்பு எழுத வேணும் எண்டு கன காலமா யோசிச்சிருக்கிறன். ஆனா அது ஒரு குறிப்பில அடங்காது எண்டது மாடுமில்லாம எழுத்து நடையில அதை விபரிக்கிறதும் ஏதோ முடியிற காரியமும் இல்லை எண்டதால இவ்வளவு நாளும் தள்ளி போயிட்டுது. கடைசியா ஒரு முயற்சி. 100% அந்த நினைவுகளை மீட்குதோ இல்லையோ முடிஞ்சவரை முயற்சி செய்யிறன்..

ஆரம்ப பாடசாலையில இருந்து தொடங்கினால் சுவாரஸ்ஸியமா இருக்கும். ஆனா அந்த காலத்தில நான் பால்குடி. அம்பிள பொம்பிள வித்தியாசம் இல்லாம இருந்தகாலம். அந்த கால கதா பாத்திரங்கள் இதை இன்பமான மீட்டலாக கருதிக்கொள்ளுங்கோ.

ஆறாம் ஆண்டில பள்ளிக்கூடம் போனதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை.ஆனா பள்ளிக்குட வாசலில கனக்க குழந்தைகள் அப்பா அம்மாவ விட்டுட்டு வகுப்பில இருக்க மாடோம் எண்டு அடம் பிடிச்சு கொண்டிருக்கேக்க நாங்க 2 பேர் சத்தம் போடாம, அப்பா டாட்டா காட்ட பேசாம காட்டீற்று மற்றவங்கள் அழுகிறத பாத்திட்டு இருந்தமாம் எண்டு ஒரு கதை. அந்த 2 பேரும் யாரா இருக்கும் எண்டு இண்டைக்கு நான் சொல்லத்தேவையில்ல. மிச்சக்கதையில தெரிய வரும்.

3ம் ஆண்டில இடம் பெயர்ந்து பேந்து வந்து திருப்பவும் அங்க ஒண்டு சேந்ததுக்கு பேந்து தான் பல சுவாரசியங்கள் நடந்ததா ஞாபகம்.

ஆண்டு நாலு படிக்கேக்கயே பாதி கொசப்பு வேலைகள் தொடங்கியாச்சு.

நாலாம் ஆண்டில நாங்கள் வேண்டாத அடி இல்லை. சண்டியன் ஜெகாநந்தராஜா B வகுப்பு class teacher.எங்களுக்கு C வகுப்பில 2ம் நிலை சண்டியராக தன்னை பரிணமித்த நாகேஸ்வரன். அது மட்டுமெண்டா பரவாயில்லை. மொணிற்றர் எண்டா அந்த காலத்தில மினிஸ்ர்ர் levelஇல சொல்வாக்கு. எங்களுக்கு வாச்சது கள்ளப்பூனை குணா. நாங்கள் 2 பேர் கிட்டத்தட்ட இரணைப்பிள்ளையள் மாரி. மொணிற்றர் அருளினியனை மாட்டி அவன் அடி வேண்டினா இலவச இணைப்பா அமரேசும் வாங்குவார். இப்பிடித்தான் மறுதலையும். இதில பிஞ்சின முத்தின மாரி அந்த காலத்திலயே Girlfriends..ம் ம்.நிலைமைய பாருங்க. அவளவையோட கதைக்கிறதில இருக்கிற இன்பத்த விட சண்டை பிடிக்கிறதில ஏதோ ஒரு சந்தோசம். அப்பதான் நாங்கள் ஏதாவது இடக்கு முடக்கா அவையையும் மாட்டி விட்டிடுவம்.ஆனா அவளவக்கு ஒருத்தன் கூட அடிக்க மாட்டாங்கள்.கடுப்பில எத்தினையோ தரம் மாட்டியும் பாத்தம் வேலைக்கு ஆகல. அவளவைய மாட்டினா அவை கண்ணக்கட்டி கோபம் போட்டிடுவினம். பேந்து ஒரு term முடிஞ்சு அடுத்த term வரேக்க எல்லாம் மறந்து நேசம் போடுவம். பள்ளிக்கூடம் விட்டாப்பேந்து எங்கள கூப்பிடுறதுக்கு யாராவது வரும் வரையும் நாங்கள் நாலுபேரும் அப்பிடி என்னத்த தான் கதக்கிறனாங்களோ தெரியாது. வகுப்பில அவளவையோட கதக்கிறதும் குணா எங்களை மாட்டிறதும் வழமையான ஒண்டு. நாகேஸ்வரன்ர அடிக்கு பயந்து சிலபேர் வகுப்பறையையே கழிவறையாயும் பாவிச்சிருக்கிறாங்க்கள்.

நாலாம் ஆண்டில கந்தசாமி எண்டவர் தான் அதிபர். அவர் நல்லா சுருட்டு பத்துவார். அவர கண்டாஅ எப்பவுமே ஓழிச்சு ஓடுற நாங்கள் தேடிப்பிடிச்சு அந்தாள் சுருட்டோட நிக்கேக்க குட்மோணிங் சொல்லுவம். அந்தாளும் சுருட்டோட நிக்கிறதால பேசாம விட்டிடும். ஒரு நாள் அந்தாள் பிளான் பண்ணி சுருட்டு பிடிக்கிற மாரி நிண்டு எங்கள பிடிச்சிட்டுது. பேந்தென்ன குண்டி பளுக்க வீட்ட போய் தண்ணி தடவினது தான்.

நல்லூர் திருவிழாவில ஒரு அம்மம்மா குழல் ஒண்டு வாங்கிக் கொண்டுபோய் வகுப்பில ஒரே அரியண்டம் போட்டதில எனக்கு அம்மம்மாகுழல் எண்டு பட்டம் வச்சு இன்னும் சிலது குழல் எண்டுதான் என்னை கூப்பிடுதுகள்.

ஐந்தாம் ஆண்டில சுகிர்தா மிஸ் தான் எங்களுக்கு.எங்களுக்கு இருக்கிற கிளுகிளுப்பு காணாதெண்டு அவா பெடியளும் பெட்டயளும் சோடியா இருக்கவேணும் எண்டு சட்டம் வேற போட்டுட்டா. சோடி பிரிக்கேக்கயும் மனுசி எங்கள் நாலு பேருக்கயும் தான் எங்கள சோடி பிரிச்சது. பேந்தென்ன. எனக்கு பக்கத்தில ஒருத்தி. அவளோட கதச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா அவள் பிளேட் மட்டும் தரமாட்டாள்.நானோ ஒவ்வொரு நாளும் புது பெஞ்சில் தான் கொண்டு போவன்.ஏனெண்டா முதல் நாள் பாவிச்சது யாருக்காவது சூனியம் செய்யிற முயற்சீல உடஞ்சுபோம்.புது பெஞ்சில் கொண்டுவந்தா அது தீட்டி இருக்கது.பிளேடும் இருக்காது.பக்கத்தில இருக்கிறவள் அது மாடும் தர மாட்டாள்.ஏனெண்டு கேட்டா பிளேட் மொட்டையா போடும் எண்டுவாள். அருளினியன் தான் மொணிற்றர் வேற. அவனுக்கு ராணிகாமிக்ஸ் குடுத்தா குழலூதின பாம்பு மாரி இருந்திடுவான். நான் குளிர் காயுறது. பக்கத்தில வேற நல்ல அலட்டல் சோடி. தனக்கு வந்த சோடி சரியில்லை எண்ட கடுப்போ என்னவோ அங்க ஒருத்தன் சாமியார் மாரி தான் வகுப்புக்கு வருவான் அவன் தன்ர அப்பரோட வந்து இதென்ன சோடியா விடுறது.பாலியல் துஸ்பிரயோகம், கலாச்சார சீரழிவு எண்டு அறிக்கை விட்டு கள்ளச்சாமி எண்டு செல்லமா அழைக்கப்பட்ட நவராஜகுமரனை வகுப்பு மாத்தியாச்சு.

அவன் ஒருவருசமா நாங்கள் சோடியாய் இருக்கிறம் எண்ட கடுப்பில காதல் கதை ஒண்டு கட்டி விட்டுட்டான். நாங்க்களும் பெரிய சி.ஐ.டி வேலை எல்லாம் பாத்து அவன பிடிச்சு கேட்டா அவன் செப்டெம்பர் மாதம் தான் ஏப்ரல் fool பகிடி விட்டன் எண்டான். என்னவோ அவன் கட்டி விட்டகதை இண்டை வரைக்கும் உன்மையாத்தான் இருக்குது..

அந்த வருசமே ஒருத்தி பெரிய பிள்ளையும் ஆகீற்றாள். பாலன் பலன் எண்டு ஒரு சிவபாலன் இருந்தான். அவன் நல்லா கணக்கு செய்வான். ஆனா அவன் செய்யிற கணக்கு அவனுக்கு மட்டும் தான் விளங்கும். பெட்டயளுக்கு முதல் தான் காட்ட வேணும் எண்டு பறதிப்பட்டு அடிக்கடி பிழை விட்டு அடி வேண்டுவான். நாங்கள் உந்த காட்டுற வேலைக்கே போறேல்லை.எப்பவுமே ராணி காமிகஸ் தான்.

இதய ரூபன் எண்டு ஒருத்தன். நல்ல இதயம் தான் அவனுக்கு. தினமும் குறஞ்சது 2 கிலோ மிக்ஸர் கொண்டு வருவான். நமக்கு தினமும் பாணும் சம்பலும் புட்டும் கத்தரிக்காய் பொரியலும் தான். நாங்கள் நம்மட சாப்பாட்ட குடுத்து பண்டமார்று செய்யிறம் எண்டு சொல்லி 2 கிலோ மிக்ஸர அபேஸ் பண்ணி ஒரு துண்டு பாண குடுத்து சுத்தீடுவம்.

இதால பாதிக்கப்பட்ட்தில 2ஆவது முக்கிய நபர் நம்ம சாமி. அவர் எல்லாத்யும் யோசிச்சு தான் வகுப்பு மாறினவர். இவங்கள் 2 பேரும் தன்ர சாப்பாட்டையும் தாக்கி அழிச்சிடுறாங்கள் எண்ட கவலையும் அவனுக்கு.

அவன் வகுப்பு மாறினது எங்களுக்கு கடுப்போ கடுப்பு. ஒரு நாள் அவனை மடக்கி பிடிச்சு, எங்களிட்ட ஒரு லீட்டர் மண்ணெண்ணையில உலகம் சுத்திப்பாக்கிற பிளேன் ஒண்டு நிக்குது எண்டும் நேற்று நாங்கள் சுத்தி பாக்க போனதால தான் பள்ளிக்கூடம் வரேல்லை. வாற கிளமை எங்கட வகுப்பால எல்லாரையும் ஏத்தி கொண்டு போப்போறம்.2ரூபாதான் ஒவ்வொருத்தரிட்டயும் வேண்டுறம் எண்டு அவிச்சிட்டம்.

நவத்தார் கடுப்பாகி அண்டு முளுக்க தகப்பனுக்கு அரியண்டம் குடுத்து விட, அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிய நவத்தாரிண்ட அரியண்டம் தாங்கேலாத அப்பா வேற வழியில்லாம எங்கள கூப்பிட்டு இவனையும் கூட்டிக்கொண்டு போங்கோ நான் முழு காசும் தாறன் எண்டு கேக்க நாங்கள் ஏதோ நவத்தாரிட அப்பவும் நம்பீற்றார் எண்டு நினைச்சு அவருக்கும் அவிக்க தொடங்கீற்றம்.அந்த பிளேன் இப்ப ரிப்பயர்.அடுத்த கிளமை போகேக்க நாங்கள் உங்களுக்கு சொல்லுறம் எண்டு சொல்லிட்டம். அந்தாள் கடுப்பாகி அடுத்த கீளமையும் வந்து கேக்க நாங்கள் வெடிச்ச கதயையே மறந்துபோய் உளறி பிடிபட்டு ஞானக்காந்தன் சேரிட்ட ஏதோ செல்வாக்கை பயன்படுத்தி உதை வாங்காம தபீற்றம்.

அது போக எங்களுக்கு அறிவு வந்த காலத்தில இருந்தே நமக்குள்ள இருந்த டவுட்டு.கடசியா கிண்டு கொலீஜ்ல தான் கிளீயர் ஆணது.அது என்னண்டு கேட்டா கொஞ்சம் ஓவர் தான்…. அதென்ன வீட்டில எல்லம் ஒரு toilet தானே. அதென்ன இங்க மட்டும் ஆம்பிள பிள்ளயளுக்கு தனியா பொம்பிள பிள்ளையளுக்கு தனியா 2 toilet எண்டது தான் அந்த டவுட். அவ்ளோ பால்குடிகள் நாங்கள். இப்ப அங்க முந்தி கழிவறையா இருந்த இடங்கள் எல்லாம் வெறுமையா இருக்குது. கடசியா நானும் அருளியும் அங்க போகேக்க அந்த பெண்கள் கழிவரையில நிக்கேக்க ஏதோ சாதிச்ச மாரி ஒரு பீலிங்க். அப்ப பாருங்களன் நிலமையை.

தினேஸ்காந் எண்டு ஒருத்தன் D வகுப்பில அஜந் எண்டவெனோட சேந்து சண்டித்தனம் காட்டிறது. அவங்களோட அடிபட எங்களால ஏலாது. எங்க வகுப்பு சண்டியன் நிசாந் அவன் தான் எங்கட கூலிப்படை. இந்த கூலிப்படை சண்டை interval நேரத்தில நடந்து கொள்ளும். கூலிப்படை நிசாந்துக்கு நாங்கள் interval சாப்பாடு சப்பிளை பண்ணுவம்.அது கூடுதலா நவத்தாரிண்ட சாப்பாடா தான் இருக்கும்.

நவத்தார் சாப்பாடு கட்டிக்கொண்டுவாற ஸ்ரலே தனி. 2 செற் சாப்பாட்டு பெட்டி. 2 coloring போத்தலுக்குள்ள குளம்பு சொதி கொண்டு வருவான்.அத விட பிரிம்பா சம்பல் கட்டி வருவான். அவன் சாப்பாட்ட ஒவ்வொண்டு ஒவ்வொண்டா எடுத்து வக்கேக்கயே எங்களுக்கு கடுப்பாகீடும்.எங்கட சாப்பாட்ட விட்டுட்டு கேட்டு பாப்பம்.தாராட்டா உனக்கும் இல்ல நமக்கும் இல்லை எண்டு டஸ்ரற தூக்கி விளையாட தொடங்குவம். அவனுக்கு தெரியும் சரியா மூண்டாவது எறி தன்ர சாப்பாட்டு பெட்டிக்கு தான் விழும் எண்டு.உடனயே பண்டமாற்றுக்கு ஒத்து கொண்டிடுவான். இதயரூபண்ட 2 கிலோவில 2 பிடிய குடுத்திட்டு அவன்ர 10 இடியப்பத்தையும் அபேஸ் பண்ணீடுவம். அத நிசாந்துக்கு குடுத்து அடிபாட்டுக்கு செற் பண்ணுறது.

எவ்வளவுதான் அடிபட்டாலும் எங்கள் எல்லாருக்கும் மேல 3 பேர் இருக்கிறாங்கள்.அவங்கள் A வகுப்பு சண்டியர். அவங்கள கண்டாலே நாங்கள் வயித்த குத்துது எண்டு மேசையில தலைய மறச்சு கொண்டு படுத்திடுவம். அது தான் சாக்கன் தேஜோமயானந்தா, பிரணவ ரூபன், பிரசாத். பிரசாத் எண்டவன் ஒரளவு நம்ம றேஞ்தான். அவன் வந்தா நாங்கள் சாதுவா கிளம்ப அவன் உடன தன்ர வகுப்புக்க போய் நிண்டுடுவான். நாங்கள் Toilet போறதெண்டா அவங்கட வகுப்ப கடந்து தான் போகவேணும். எப்பிடி வேகமா போனாலும் ஆர் படிப்பிச்சு கொண்டிருந்தாலும் அவங்கள் எங்கள கண்டிடுவாங்கள்.அரமேஸ் எண்டுதான் அவங்கள் என்ன கூப்பிடுறவங்க. அப்பிடியோ அவங்களிட்ட கடசி மாட்டும் கொழுவாம அடி உதை வாங்காம தப்பீற்றம்.

ஆனா தேஜோ எண்டவன் பேந்து senior prefect ஆகீற்றான். நம்ம பாடு அம்பேல். அந்த காலத்தில தான் நாட்டுகூத்து ஒண்டு நடிக்க நான் தேஜோ அருளி சிந்துஜா (நம்ம வகுப்பு) கௌந்திகா(D வகுப்பு) துளசி(D வகுப்பு) எல்லாரும் ஒண்டாகினம். நானும் அருளியும் பீளான் பண்ணி தனிய வந்த தேஜோவோட பிரெண்சிப் செய்து எங்களுக்கு ஆபத்து இல்லாம பாதுகாப்பு ஆகிக்கொண்டம். பேந்து நீண்ட நாள் கனவு நம்ம வகுப்பு சிந்துஜா ஆர்த்திக்கு அடி வாங்கி குடுக்கணும். அது வாத்திமார் செய்யமாட்டாங்கள் எண்டு தெரிஞ்சிட்டு. வெடிக்கிறதுக்கு எங்கட செல்வாக்கு ஓகே. ஆனா அடிக்கிறதுக்கு காணாது. அதனால தேஜோவையே பகடைக்காயாய் பாவிச்சு ஏலுமெண்டா கை வை பாப்பம் சிந்துக்கு எண்டு உசுப்பேத்தி ஒருமாரி ஒரு சரஸ்வதி பூசையில எங்கட கனவ நிறைவேற்றீற்றம்.

நாட்டுக்கூத்தில நானும் தேஜோவும் சோடி. துளசிய வெட்டி கொலை செய்து தூக்கி வீசிறது தான் எங்கட வேலை. அவள தூக்கி வீசின ஒவ்வொரு தடவையும் நாங்கள் கொஞ்ச நேரம் அசையாம நிக்கணூம்.அந்த கடுப்பில அவள ஒவ்வொரு முறையும் முறையா சுழட்டி எறிஞ்சிடுவம். இத கவனிச்ச எஙகட நாடகம் பழக்க வந்த வாத்தியார். எங்கட sceneஐ மட்டும் தனியா வக்க தொடங்கீற்றார். விடுவமா நாங்கள், தலையில ஒருத்தர் காலில ஒருத்தரா தான் தூக்கிறனாங்கள். மெல்லமா வையுங்கோ எண்டு சொன்னா மெல்லமா முதல்ல கை பிடிச்சிருக்கிறவன் வக்க மற்றவன் நீட்டி நிமிந்து நிக்கிறது.(கற்பனை செஞ்சு பாருங்கோ) பேந்து என்ன வாத்தியார் டேய் காலை விடடா எண்டு கத்தத்தானே வேணும். அவர் கத்த "தொம்' எண்டு காலை விடுறது.

இதுக்குள்ள அதிபருக்கு 2 பொம்பிள பிள்ளையள். அவை பொஸ்கோவில தான் படிச்சவை. எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதிபர்ட மகள் நாங்கள் நாட்டுக்கூத்து பழகேக்க வந்திருந்து பாத்தவா. 5ம் ஆண்டிலயே அவள sight அடிச்சநாங்கள். அவளுக்கு colors காட்டினதில சைலென்ஸ் மணி அட்டிச்சதயும் கவனிக்கேல்லை. பாடசாலை கீதம் நடக்குது தேஜோ அருளி நான் மூண்டு பேரும் deep discussion நட்த்தி கொண்டிருக்கிறம். பின்னால வில்லன் ஜெகாநந்தராஜா கண்டிட்டார். பேந்தென்ன வீட்ட பேய் அம்மாக்கு தெரியாம உள்ளங்கைக்கு எண்ணெய் போட்டது தான்.

இப்பிடி எவ்வளவத்த செய்தம்.

இப்பிடி குறும்புத்தனமா எத்தினை திருகுதாளங்கள் செஞ்சிருக்கிறம் எண்டு நினைக்கேக்க வெக்கம் எண்டதுக்கு மேலால ஒரு சந்தோசம் இருக்கு.

தொடர்ந்து இந்துக்கல்லூரி திருகுதாளங்கள் வரும்.

இந்த குறிப்பில கன சம்பவங்கள் நினைவில இல்லாம் போயிருக்கும். யாரையாவது பாதிச்சிருந்தா மன்னிசுக்கொள்ளுங்கடா. உங்களுக்கும் ஏதாவது ஞாபகம் இருந்தா comment பண்ணுங்கடா.

2 comments:

  1. //நாலாம் ஆண்டில கந்தசாமி எண்டவர் தான் அதிபர். அவர் நல்லா சுருட்டு பத்துவார். // இது வரலாற்று தவறுடா.. அவர் பேரு தவஜாஜா...
    சும்மா சும்மா இறுக்கப்புடாது..

    மணியடிக்கிற பொறுப்பே தேஜோட்ட தானே இருந்தது.. இதுல நீங்க எப்படிடா மணியடிச்சது தெரியாம deep discussion நடத்தியிருப்பியள்....?

    நீ சோடி போட்டு நடிச்சவளின்ட பிள்ளை இன்னும் 2 வருசத்தில ஸ்கூல் போகப்போகுது தெரியுமோ...?(அது ஆம்பிள பிள்ளை தான்..)

    ஏதோ நாங்க நாட்டில இல்லை எண்டவுடன சீன் போடப்புடாது...

    “இப்பாடசாலையை விட்டுப்பிரிந்தாலும் எம் பாடசாலையை மறவோம்“ எண்டு கடைசி நாள் ப்ளக் போட்டில சோக்கால கவுஜ எழுதினது ஞாபகமிருக்கோ...?

    உன்ர மெய்ல் ஐடி என்ன?

    ReplyDelete
  2. amareshg@gmaiil.com

    அடேய்...கந்தசாமி தவராசா எண்டது சரிதான்.எனக்கு மறந்து போச்சு..மணி தேஜோ அடிக்கிறது சரி..அவனுக்கு யார் ஞாபகப்படுத்திறது தெரியுமே..அவனும் நாடக குழுவில நீண்டதாலா பிரணவரூபன் தான் அப்ப அடிச்சவன்.பிரண்டை அடிக்கிறது தெரியாதோ....
    அடேய் யாரடா அவள்..என்ர சோடியா இருந்தவள் எண்டத அவள் நிரூபிச்சிட்டாள் ஆனா நான்...........

    ReplyDelete