உன் நினைவினிலெ
என் அர்த்த்முள்ள பல மணித்துளிகள்
கரைந்தோடுதே.....
அந்த இனிமை தனை இழந்த
இந்த தனிமை எனை வாட்டுதே..
ஏக்கம் கூடுதே.....
நீ எனை ஆறுவயதில் தூக்கித்திரிந்தாய்
நான் அதை உண்ரும்வயதில் இல்லை
அப்போது.....
மழலையில் கூட நீ பசி என்
குடலைக் கூட திண்றுவிடும்-தம்பி பாவம்
என்பாயாமே....
காலிலே கட்டி கதிரையில் தொடுத்தால்-தம்பியை
கல்லிலே கட்டி கடலிலே போட்டதுபோல்
அழுவாயாமே......
குழப்படிகளின் ஆரம்பம் நீயாகத்தான் இருப்பாய்-ஆனால்
அடுப்படியில் அடி வேண்டுவதேதோ நானாகத்தான்
இருந்தேனே.....
10 மணிக்கு என்னிடம் அடிவாங்கிய நீ-அழுதபடியே
2 மணிக்கும் நீ கட்டிலில்! நான் அடிவங்கும்
வரைதானே.....
கோப்பையில் சாப்பிட்டால் செமிக்காத சாதம்-தம்பியின்
கோப்பையில் கொத்தினால் ஏதோ செமித்துவிடும்
தானே.....
சைக்கிளில் காத்து இல்லை எண்றால்-தம்பி
சைக்கிளை உடைத்துவிட்டான் என்பது உனக்கு
overதானே.....
நாங்கள் இருவருமிருக்கையில் இனிமையாயிருப்போம்
அவர்கள் இருவரும் வந்ததும் மிருகமாய்ப்
போவோமே.....
எமது போரில் ஆயுதங்கள் எல்லாம்
நமது ஊரில் இனம் தெரியா விலங்குப்
பெயர்கள் தானே....
Tom & Jerry பார்க்கவேண்டிய காலத்தில் பார்த்ததில்லை-ஆனல்
Tom & Jerryபோல் வாழவேண்டிய காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்
நிஜம்தானே......
நம் கோபங்கள் தொடங்குவது நம் பார்வையிலே
நம் தாகங்கள் கூடுவது நம் பிரிவினிலே-இது
உன்மைதானே....
தொலைபேசியில் நீ பேசுவதோ 2 வார்த்தை
தொலைதூரத்தில் நான் கேட்பதோ 1000 அர்த்தங்கள்
"Hallo தம்பியே...இருக்கிறியே....”
உன் நினைவினிலெ
என் அர்த்த்முள்ள பல மணித்துளிகள்
கரைந்தோடுதே.....
தொலைந்துபோன நம் நெருக்கத்தை
தொலை தூரத்தில் நான் தேடுகிறேன்
கிடைத்துவிடும்...
You wrote all these poems?
ReplyDeleteyes for sure
ReplyDeletegood one !!!!!!!try more............
ReplyDeletevery nice amaresh!!!
ReplyDeleteசொல்லப்பட்டவிதம் அற்புதம்!!!