அண்மையில் இந்தியாவின்
தலைநகரில் இடம்பெற்ற பாடசாலை மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவம் சமுக வலைத்தளங்களில்
பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த விடயம் தொடர்பாக எனது கருத்துப்பதிவு.
ஒரு பாலியல் பலாத்காரம்
என்பது சர்வசாதாரணமாக இந்த சமுகத்தில் அரங்கேற்றப்பட்டு விடக்கூடிய ஒன்றாக இருப்பது
மிகவும் மனவேதனைக்குரியதே. இது நாடு, இனம், மதம், மொழி, கலாசாரம் போன்ற எந்த வேறுபாடுகளுமின்றி
எல்லா இடங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது மற்றுமொரு கசப்பான உன்மை. இந்த
நிலமை அண்மைக்காலங்களில் தான் அதிகம் மேடையேற்றப்படுகின்றது என்பதும் அப்பட்டமான பொய்யாகவே
இருக்கின்றது.
இந்த நிகழ்வு சமுகத்தில்
ஏற்படுத்தும் எதிரலைகளும் அப்படியான சம்பவங்களை குறைக்கும் படியானதாக இல்லை என்பது
எனது தாங்கெணா வேதனையாக இருக்கின்றது. என்னால் இந்த நிகழ்வு சார்பாக ஒரே ஒரு விடயத்தை
மட்டுமே உறுதியாக் சொல்லக்கூடியதாக இருக்கிறது. அதுத ”நான் இந்த உலகில் எந்த ஒரு
பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்யமாட்டேன்” என்பதுதான். இதை இன்று ஒவ்வொரு இளைஞனும் சொன்னாலும்
அது மிகைப்படுத்தப்பட்ட “OVER BUILD UP” வகைக்குள் அடங்காது. ஏனென்றால் இன்றைய சமுக நீரோட்டமானது
ஒவ்வொருவரையும் எந்த தருணத்திலும் மாற்றிவிடும் சக்தியான இருக்கிறது. நாம் இதையெல்லாம்
செய்வோம் என எமது சிறுவயது பருவத்தில் எதிர்பார்க்காத பல விடயங்களை நாமே எமது வாழ்வில்
செய்திருக்கிறோம்/ சாதித்தும் இருக்கிறோம். அதற்கும் நிச்சயமாக எம்மை சுற்றியுள்ள சமுகங்கள்
மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருநதாலும் சரி.
மேலும் சமுக வலைத்தளங்கள்
மற்றும் இதர ஊடகங்களில் இது தொடர்பில் பரப்பப்பட்டுவரும் விடயங்களை பார்க்கையில்; பாலியல் பலாத்காரம்
ஏதோ பல காரணிகளை அடிப்படையாக வைத்தே செய்யப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் என்னால் அவற்றையெல்லாம்
ஏற்கவும் முடியவில்லை. அவர்கள் சொல்லும் அந்த So called காரணிகளினை நம்பும் நிலையிலும்
நான் இல்லை.
பாலியல் பலாத்காரம்
என்பது ஏதோ கொலை பண்ணுவதுபோல இரண்டுமணித்தியால திட்டமிடலாகவோ அன்றி ஒரு விபத்தாகவோ நடந்துமுடிந்துவிட
முடியாத ஒன்று. (பாலியல்) உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் கூட அப்படியான சம்பவம் நடக்கும் என்பதையே
என்னால் நம்ப முடியவில்லை.
குட்டைப்பாவாடை
அணிந்து செல்வதோ அல்லது கவர்ச்சி ஆடைகளை அணிந்துகொள்வதோ இந்த பாலியல் பலாத்காரங்களுக்கு
காரணமாய் அமைந்துவிடாது என்பதில் நான் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறேன்.
அதுவே அதிகப்படியான ஆண்களின் எண்ணக்கருவாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இது
பெண்களின் ஆபாச செயல்பாடுகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் உச்ச வெளிப்பாடாக இருக்க முடியும் என கருத்துக்களை கூறுவோர், ஆண்களைப்பற்றியோ அல்லது பாலியல் வன்முறை என்றால் என்ன
என்பதுபற்றியோ முழுமையான அறிவு கொண்டவர்களாக இருக்கமுடியாது என ஊகிக்கமுடிகிறது.
பாலியல் வன்முறைக்கு
எதிராக கோஷம் செய்பவர்கள் கூட இந்த விடயங்களை முன்வைத்து கோஷம் செய்வதிலேயே தங்கள் காலத்தை செலவழிக்கின்றனரே
தவிர, யாரும் அந்த வன்முறைக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை அறியவோ அன்றி மேலும் அப்படியான
சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்கவோ உன்மையான முனைப்பை எடுப்பதாக
புலப்படவில்லை (பொதுவாக/வெளிப்படையாக).
சில ஊடகங்களில்
இந்த சம்பவம் தில்லியில் நடந்ததால்தான் அதை பெரிதாக்குகிறார்கள் எனவும் சாதாரணமாக கிராமங்களில் நடந்திருந்தால்
அதை யாரும் கருத்திலெடுத்திருக்க மாட்டார்கள் என புலம்புவது வேதனைக்குரிய விடயமே. 4 தவறுகள் கண்டுகொள்ளப்படாமல்
விடப்பட்டிருக்கிறது என்பதற்காக 5ஆவதை கண்டுகொள்வது தவறாகுமா?
இப்படி புலம்பும்
ஊடகங்கள், நாளாந்தம் எத்தனை பெண்கள் அவரவர் கணவன்மார்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்
என்பதை கருத்திலெடுத்திருப்பார்களா?. மனைவி என்றால் இந்த வல்லுறவுகளையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான்
வேணும் என எத்தனை மனைவியர் தமக்குள்ளேயே தப்புக்கணக்கு போட்டு வாழ்ந்து மடிகின்றனர்
என்பது எப்போதுமே வெளிவராத உன்மைகளே. நான் அறிய அப்படியான சந்தர்ப்பங்கள் எனது சமுகத்திலேயே
நடந்துகொண்டிருக்கின்றன.
முடிவாக என்னைப்பொறுத்தவரை
கொலை என்பதை தாண்டி, ஆண்கள் சமுகத்தாலும் உணரமுடியாத ஒரு காட்டுமிராண்டித்தனம்தான் பாலியல்
வன்முறை. இதற்கு ஆணாதிக்கம், பெண்கள் மீதான ஆண்களின் பார்வை போன்றனவெல்லாம் காரணமாக
முடியாது. இது பெண்களுக்கும் ஆண்களுக்குமான இடைவெளியாகவும் இருக்க முடியாது. அதையும்
தாண்டி தனிமனிதன் ஒருவரின் மூளைக்கோளாறே காரணமாக இருக்கமுடியும் இல்லையேல் ஒரு மனிதனின் பழிவாங்கல் நிலையின் உச்ச நிலையே காரணமாக இருக்கமுடியும். இப்படியான சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் தாங்கள்
செய்தது தவறு என உணருவார்கள் (உன்மையாக உணருவார்கள்) என்பதில் எனக்கு எள்ளளவேனும் நம்பிக்கையில்லை.
இப்படியான செயல்களை செய்தவர்களை சாதாரண குற்றமிழைத்தவர் பட்டியலில் சேர்ப்பது என்பது,
காரணங்களை வைத்து சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்தவர்களை கேவலப்படுத்துவதாக அமைகிறது.
பாலியல் வன்முறை
சம்பவங்களை ஆராய தனி சட்டம், நீதிமன்றம் அமைக்கவேண்டுமென்றெல்லாம் கோரிக்கைகள் வைக்கப்படுகிறதாம்.
இவற்றையெல்லாம் சட்டம் என்ற போர்வைக்குள் அடக்கப்படக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தினால்
அது பாலியல் வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு காரணியாகவே அமையும்.
குட்டைப்பாவாடை
பாலியல் வல்லுறவின் காரணமல்ல என சம்பந்தமேயில்லாமல் போடும் கூக்குரல், நாளைய சமுகத்திற்கு
குட்டைப்பாவாடைக்கு தண்டனை என்பது பாலியல் வன்முறை என்ற தகவலைத்தான் சொல்லுமே தவிர,
பாலியல் வன்முறை நிகழும் சதவீதத்தையேனும் குறைக்காது.
நடு இரவில் தனியாக
அம்மணமாக ஒரு பெண் நின்றாலும் அவளை வல்லுறவுக்கு உட்படுத்த வேண்டும் என்ற மனோநிலை சாதாரண
பாலியல் தேவை உள்ள ஒரு ஆணுக்கு கூட ஏற்படாது. பாலியல் வன்முறை என்பது பாலியல் சுகத்துக்கான
ஒரு வழி இல்லை. அதன் மூலம் பாலியல் ரீதியான சுகத்தை கூட காணமுடியாது என்கிற உன்மையை
இந்த ஒழுங்குபடுத்தப்படாத உணர்வலைகளால் சமுகத்துக்கு புரிய வைக்க முடியாதுள்மை மிக
மிக வேதனையளிக்கிறது.
பாலியல் சுகம்
தேடும் ஒரு ஆண் (அதற்கான ஒரு பெண்ணின் அனுமதி கிடைக்கப்பெறாதவன்) தனக்கான இரண்டாம் கட்ட
வழியாக நினைப்பது இந்த வன்முறையைத்தான். இதற்கு எமது சமுகம் பாலியல் பற்றி பேணிவரும் ஒரு
மாயையே காரணம் என நான் உட்பட்ட சமுகத்தை சாடுகிறேன். முதலாவது வன்முறையை நிகழ்த்திய பின்னரும் அந்த ஆணுக்கு
தான் அனுபவித்தது பாலியல் இன்பம் இல்லை என்பது புரியாமலேயே இருக்கும். நேர்த்தியான
பாலியல் உறவை அதே ஆண் அனுபவிக்க நேர்ந்தால், அவன் தான் வன்முறை மூலம் அனுபவித்தது இன்பம்
என்னும் வகைக்குள்ளேயே அடங்காது என்பதை அறிவான். இதை தெளிவுபடுத்த அல்லது இத்தகைய பாலியல் கல்வியை வழங்க எமது சமுகங்களும் குடும்பங்களும் தயாரில்லை என்பதுதான் மிகவும் கேவலமான உன்மை.
அதையும் தாண்டி (பாலியல் பற்றிய அறிவுள்ள)
ஒருவன் வன் பாலியலை தேர்வு செய்வானாகில் அவன் சூழ் நிலைக்கைதியல்ல. அவன் மனநோயாளி அல்லது
வாழ்வதற்கு தகுதியற்ற ஒரு உயிரினம். அவ்வளவு தான்.
மரண தண்டனை என்பது
வாழ்வதற்கு தகுதியற்றவர்களுக்கான ஒன்றல்ல. அது வாழ்வில் தவறிழைத்தவர்களுக்கான ஒன்றுதான்.
தயவுசெய்து சாதாரண மரண தண்டனைக்காக போராடவேண்டாம். அதையும் தாண்டிய ஒரு தீர்ப்பு அவர்களுக்கு
முக்கியம்.
இந்த எதிர்வலைகளை
பார்க்கும் போது எனக்குத்தோன்றிய எண்ணம் ஒன்றே ஒன்றுதான், ஆண்கள் சமுதாயம் பெண்களின் உலகை அறிந்திருந்திருக்கவில்லை
என்ற உன்மையையும் தாண்டி பெண்கள் சமுதாயம் ஆண்களைப்பற்றிய அல்லது ஆண்களின் உலகைப்பற்றிய சரியான கண்ணோட்டம்
கொண்டவர்களாக இல்லை என்பதே.
மீண்டும் எனது
கருத்தை அழுத்தி சொல்லி விடைபெறுகிறேன்.
குட்டைப்பாவாடை,
பெண்களின் குறும்பு, பெண்களின் குழப்படி, பெண்களின் ஆபாச செயல்பாடுகள், பெண்களின் இயல்பு
இவையெதுவும் பாலியல் வன்முறைக்க்கு காரணமானவையாக இருக்கவே முடியாது. அதை பாலியல் வன்முறைக்கு
காரணமான செயல்பாடுகளாக கருதுபவர்களும் பாலியல் வன்முறைக்கைதிகளே.
good one
ReplyDelete//குட்டைப்பாவாடை, பெண்களின் குறும்பு, பெண்களின் குழப்படி, பெண்களின் ஆபாச செயல்பாடுகள், பெண்களின் இயல்பு இவையெதுவும் பாலியல் வன்முறைக்க்கு காரணமானவையாக இருக்கவே முடியாது. அதை பாலியல் வன்முறைக்கு காரணமான செயல்பாடுகளாக கருதுபவர்கள் பாலியல் வன்முறைக்கைதிகளே.//
ReplyDelete:D :D
பாலியல் பலாத்காரம் என்பது ஏதோ கொலை பண்ணுவதுபோல இரண்டுமணித்தியால திட்டமிடலிலோ அன்றி ஒரு விபத்தாகவோ நடந்துமுடிந்துவிட முடியாத் ஒன்று.
ReplyDeleteஅதையும் தாண்டி தனிமனிதன் ஒருவரின் மூளைக்கோளாறே.
குட்டைப்பாவாடை, பெண்களின் குறும்பு, பெண்களின் குழப்படி, பெண்களின் ஆபாச செயல்பாடுகள், பெண்களின் இயல்பு இவையெதுவும் பாலியல் வன்முறைக்க்கு காரணமானவையாக இருக்கவே முடியாது....ம்ம்.. இது அந்த நேர ஈர்ப்புக்குமட்டுமே உதவலாம்(குட்டைப்பாவாடை)
good one
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
ReplyDeleteDisciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra