சிறுதீவின் தலையென்பது யாழ்மண்ணை
அதனிலும் தலையென்றொன்றுள்ளது
ரவுணென்று சொல்லுவர் அதை இங்கிலீசில்
கல்விக்கென பல கூடங்கள் உளதங்கே-ஆனால்
கற்க மறப்பது தான் அங்குள்ள பலதுக்கும் பிரச்சனை
ஒருத்தர்ட சூட்டில குளிர் காயுறதுதான் வழமையங்கே
உயர்தரமெண்டு வந்தா எல்லாமே உசரமாத்தானிருக்கும்
சிந்தனை மட்டும் பலருக்கு உசந்துதோ இல்லையோ-ரியூசன்
பீஸ் மட்டும் ஆண்டுதோறும் ஏறும்..ஆனா இறங்காது
பேமஸ் ரியூசன் எண்டு ஒரு விஞ்ஞான மண்டபம்
ரண்டாயிரம் எதிர்ப்பாலார் படிக்கிறதால பேமஸ்தான்
நடிகர் திலகங்கள் பலர் அங்க படிப்பிக்கினம்....
அஞ்சு பாடம் படிப்பிக்க அம்பது வாத்திமார்
அம்பதும் ஒரு அம்பத ட்ரை பண்ணி-கடசியா
காஞ்சமாடு கம்பில விழுந்த கததான் -சரி அதெதுக்கு
கத சொல்லி சுவாரஸ்யமாத்தான் பாடம் தொடங்கிறது
தங்கள விட்டா கம்பசுக்கு போகேலாது எண்டு சொல்லுவினம்
தமக்கு பூசை செய்தா மூண்டு ஏ எடுக்கல்லாம் எண்டுவினம்
கணக்கு படிப்பிக்க ரெண்டு செந்தில் செல்வங்கள்
ரெண்டுக்கும் பிரச்சினை வெளியில இருக்கிற ஒண்டுதான்
"கதக்கப்படாதெண்டு சொன்னபடி கிடக்கிது பாப்பம்"
நேரமெண்டா சொல்லி வேலையில்லை-அறுபதில
ஒண்டுதன்னும் கூடாது குறையாது-உக்கின பேப்பரில
இருக்கிற கணக்க தான் வருசாவருசம் வெள்ளோட்டம் விடுவினம்
தம்பி எண்டும் அவருக்கு அண்ணை மாரி ஒருத்தரும்
உன்மையைச்சொன்னா பக்கத்தி வகுப்பில இருந்தா
கேக்கிறது பாலியல் வார்த்தைகள் தான்-கழுதை அறியுமா..?
வண்டியை தள்ளியபடி ஒருத்தர் சில்மிஷ வித்தைகளும்
"இல்லையாடா தம்பீ"எண்டு இருக்கிறவன கேட்டும்
சுவாரஸ்யமா படிப்பிக்கிற வல்லமை அவர்களுக்கு மட்டுமே
இரசாயணம் படிப்பிக்கவெண்டு சிவபெருமான்மார் சிலர்
ஒருத்தர் சண்டியர்,மற்றவர் திட்டல் சாமி,மற்றவர் ஆசாமி
ஒவ்வொருத்தருக்கும் பின்னால ஒரு கூட்டமே நிக்கும்
மணியான வாத்தியார் சிரித்தத பாத்தறியோம்
அம்பது நூறு பேர வச்சு நூறு வீதம் கரசேப்பார்
இளசுகளோட கொழுவிறது தான் பிரதான தொழில்
சிவபுத்திரனொருத்தர் சிரிச்சபடிதான் பேசுவார்
வாயத்திறந்தா திட்டிறத விட பாடம் மட்டுந்தான்
ஓட ஓட இழுபட்டு பிறந்ததால பாவம் வாத்தியாகீற்றார்
பௌதிகம் படிப்பிகவெண்டு பௌவியமான குழுவொண்டு
குரு சீஷ்யனெண்டு சொல்லுறதெல்லாம் தவறணையில மட்டுந்தான்
கொட்டிலில ஏதோ நாய் கடி பூனை கடி தான்....
பழையவரிண்ட வித்துவம் முழுக்க வாயிலதான் ஜாஸ்தி
"நீ செய்வா நீ செய்வா"எண்டு ஐலண்ட் பெஸ்ற்றும் எடுக்க வச்சிட்டார்
பாஸ் பேப்பரில தெரிஞ்ச விடையை "ஐகியூல தட்டுறது"தான் வித்துவம்
முருகன்ர பேர வச்சுக்கொண்டு ஒரு அண்ணன் தம்பி சோடி
ஆனா ரெண்டுபேரும் பண்ணுறதேதோ ஆசாமித்தனம் தான்
"மீன் பொரிஞ்சாலும் சட்டீக்க தானே"எண்டுறது தான் ஒற்றுமை
அரை மணித்தியால சனியன் மூத்தவர விடாது
"பெரிய விசயம் சொல்லப்போறன் எல்லாம் கவனி........
எல்லாம் சின்ன விசயம் தம்பி"இந்த "புலம்பல்" தான் வெற்றியாம்
இளசால மட்டுந்தான்"விளங்குமடாதம்பி விளங்கும்"
எண்டு சொல்லி பௌதிகம் படிப்பிக்க முடியும்-எத்தினையோ
வசந்திகள பாத்து கடைசியா ஒரு சிந்துவ பாடிவிட்டார்
படிப்பிக்கிற வாத்தியார விட பேமஸ் ஆனது-காட் பக்கிற
பாலா அண்ணைதான் -ரசிகைகள் அதிகம் கொண்டவர் எதோ
முன்னாள் சைக்கிள் பார்க் டுயூட்டி செஞ்ச......சேர் தான்
ஓடுற ஆத்தில தீத்தம் குடிச்சாலென்ன
கழிவு மலம் கழுவினாலென்ன-காலத்த
பயன்படுத்த்றவனுக்குத்தான் "வெற்றி நிச்சயம்"

No comments:
Post a Comment