அன்மைய காலங்களில்
சமுக வலைத்தளங்களில் நான் அதிகம் பார்த்து வெறுப்படைந்த விடயங்களில் ஒன்றுதான் இந்த
“ஆணாதிக்கம்” எனப்படும் பெண்ணடிமைத்தனம் சம்பந்தமான கருத்துக்கள். என்னை மிகவும் எரிச்சலடைய
வைத்த விடயம் ஒன்று என்றே இதை சொல்லலாம். பொதுவாக என்மீதான பலரது கண்ணோட்டம் “அமரேஷ்”
ஒரு “தடிச்ச ஆணாதிக்கவாதி” என்பதுதான். இந்த பெயரை நான் வாங்கவதற்கு நான் செய்த ஒரே
ஒரு கைங்கரியம் பொண்ணடிமைத்தனத்தை ஆணாதிக்கம் என குறிப்பிடுவதை எதிர்த்ததும், பெண்ணடிமைத்தனத்தை
ஒழிப்பதை விடுத்து அதற்கு எதிராக கூக்குரலிட்டு, பெண்ணடிமைத்தனத்திற்கு இலவசமாக விழிப்புணர்வு
செய்வதை எதிர்த்ததும் தான்.