Sunday, September 16, 2012

வடக்கில் துடுப்பாட்டம்:-முற்றுமுழுதாக எனது தனிப்பட்ட பார்வை


ஓய்ந்துபோன போரினை தொடர்ந்து இலங்கையின் எல்லா மூலைகளிலும் இளம் சமுதாயம் முன்னேற்றத்தை நோக்கிய உழைப்பை முடக்கிவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை ஓரளவு துரித கதியில் முன்னேற்றப்படுவதாகவே புலப்படுகிறது. அதிலும் குறிப்பாக வடபகுதி விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமே.